கொத்தமல்லியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. கொத்தமல்லியுடன் பட்டாணி சேர்த்து செய்யும் இந்த சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.
கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
அரிசி – 1 கப்
கொத்தமல்லி – 1 கட்டு
வரமிளகாய் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
பச்சைப்பட்டாணி – 25 கிராம்
தாளிக்க :
கடுகு – சிறிதளவு
கடலைப்பருப்பு – அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிக்கை
பூண்டு – 10 பல்
செய்முறை :
* அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும்.
* கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* மிக்சியில் கொத்துமல்லி தழை, புளி, சீரகம், மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் அரைத்த விழுது, பட்டாணியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.
* கம கமக்கும் கொத்துமல்லி பட்டாணி சாதம் ரெடி.