ஃப்ளூ அல்லது தொற்றால் பாதிக்கப்படும் போது, அந்த தொற்றை எதிர்த்து நம் உடல் போராடும் வகை தான் காய்ச்சல். அதனால் காய்ச்சலை அமுக்க நினைப்பது தவறான ஒன்றாகும். ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருப்பதால், எளிதில் காய்ச்சல் தொற்றிக் கொள்ளும்.
மேலும் காய்ச்சல் தான் உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும். இருப்பினும், காய்ச்சல் அதிகமாக இருப்பது ஆபத்தானது, அதை விட அதற்கு எடுக்கும் மாத்திரைகள். எனவே கடைகளில் விற்கப்படும் கண்ட மாத்திரைகளை போடும் பழக்கத்தை கைவிடுங்கள். ஏனெனில் அதிக காய்ச்சலை குறைப்பதற்கு எண்ணிலடங்கா இயற்கை சிகிச்சைகள் உள்ளது. இப்போது அதைப் பார்ப்போமா!!!
வினிகர்
வெதுவெதுப்பான குளிக்கும் நீருடன் அரை கப் வினீகரை கலந்து அதில் 5-10 நிமிடம் வரை உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கூனைப்பூ
கூனைப்பூ தாவரத்தை கொதிக்க வைத்து, அது மென்மையாகும் வரை சமைக்கவும். இலைகளின் அடிபாகத்தை உண்ணவும்.
துளசி
ஒரு டீஸ்பூன் துளசி இலைகளை ஒரு கப் வெந்நீரில் சேர்த்து, அதனை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். இதனை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை வரை குடிக்கவும். மறுநாளே அதிக காய்ச்சல் தானாக குறைந்துவிடும்.
வெங்காயம்
ஒவ்வொரு பாதத்திற்கு கீழேயும் ஒரு பச்சை வெங்காய துண்டை வைத்து, கால்களை வெதுவெதுப்பான கம்பளியால் மூடவும்.
ஒத்தடம்
வினீகர் கலந்துள்ள வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை முக்கிக் கொள்ளவும். அதிகமாக இருக்கும் காய்ச்சலை குறைப்பதற்கு, அந்த துணியை பிழிந்து, நெற்றியில் வைக்கவும்.
கடுகு ஒரு கப்
வெந்நீரில் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். அதன் பின் அதனை குடிக்கவும்.
உருளைக்கிழங்கு
ஒரு உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி, அதனை வினீகரில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீங்கள் படுத்து கொண்டிருக்கும் போது அந்த துண்டுகளை உங்கள் நெற்றியில் வைத்திடவும். அதன் மீது துணி ஒன்றை போட்டு விடவும். 20 நிமிடங்களில் பலனை நீங்கள் காணலாம்.
எலுமிச்சை
பாதங்களுக்கு அடியில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்து, கால்களை ஈர சாக்ஸை கொண்டு மூடிக் கொள்ளவும். இதனை கம்பளி சாக்ஸ் கொண்டு மூடவும். மற்றொரு முறையும் கூட உள்ளது. அதன் படி, முட்டையின் வெள்ளை கருவில் இரண்டு சாக்ஸை போடவும். இதனை பாதத்திற்கு கீழ் வைத்து, அதனை சாக்ஸை கொண்டு மூடி விடவும்.
ஆலிவ் ஆயில் மற்றும் பூண்டு
இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் நசுக்கிய இரண்டு பூண்டை சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த கலவையை ஒவ்வொரு பாதத்திற்கு அடியிலும் தடவிடவும். பின் பாதங்களை ப்ளாஸ்டிக்கை கொண்டு மூடிடவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். ஆலிவ் எண்ணெய்யும், பூண்டும் காய்ச்சலுக்கு மிக அற்புதமான வீட்டு சிகிச்சைகளாகும்.
உலர் திராட்சை
காய்ச்சல் அதிகமாக இருந்தால், 25 உலர் திராட்சையை அரை கப் நீரில் ஊற வைக்கவும். தண்ணீரில் உள்ள உலர் திராட்சையை கசக்கி, தண்ணீரை வடிகட்டவும். அரை எலுமிச்சை பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸை அதனுடன் சேர்த்து, அதனுடன் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.