29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
29 1435560313 8 diabeticfoot
மருத்துவ குறிப்பு

உங்கள் உடல்நலத்தைப் பற்றி பாதங்கள் சொல்லும் 8 விஷயங்கள்!!!

வைட்டமின் குறைபாடுகள் முதல் தைராய்டு பிரச்சனைகள் வரை, உங்கள் பாதங்கள் உங்களின் உடல் ஆரோக்கியத்தை புட்டு புட்டு வைக்கும். நீங்கள் எதிர்ப்பார்க்காத அளவில் பல உடல்நல விஷயங்களை உங்கள் பாதங்கள் உங்களுக்கு காட்டிக் கொடுத்துவிடும்.

உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் பாதங்கள் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!!!

முடியே இல்லாமல் இருத்தல்

உங்கள் கால்கள் மற்றும் கால் விரல்களில் முழுமையாக முடி இல்லையென்றால் உங்களின் இரத்த ஓட்டம் சீராக இல்லையென அர்த்தமாகும். குறிப்பாக உங்கள் கால்களில் முடி உதிர்வு ஏற்பட்டால் இது முற்றிலும் உண்மையாகும். சரி இதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் கணுக்காலில் நாடி பாருங்கள். ஒரு வேளை, உணர முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்.

குளிர்ந்த பாதம்

ஹைபோதைராய்டு, தைராய்டு சுரப்புக் குறையினால் ஏற்படும். ஹைபோதைராய்டிசம் எனப்படும் தைராய்டு சுரப்புக் குறை ஏற்படும் போது, உங்கள் உடல் பல வழிகளில் தாக்கத்தை அடையும். அதில் பாதங்களும் ஒன்று. உங்கள் பாதம் எப்போதும் குளிர்ந்த நிலையில் உள்ளதா? வறண்ட சருமம், வறண்ட முடி, சோர்வு, விளக்க முடியாத உடல் எடை அதிகரிப்பு உட்பட தைராய்டு சுரப்புக் குறைக்கான வேறு சில அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

வீங்கிய, புண்களை கொண்ட பெரிய கால் விரல் நகங்கள்

புண், வீக்கம், சிவத்தல் மற்றும் சூடான பெரிய கால் விரல்கள் போன்றவைகள் எல்லாம் கீல்வாதத்தின் அறிகுறிகளாகும். சொல்லப்போனால், கால்விரல்களின் வீக்கங்களை வைத்தே பலர் தங்களுக்கு கீல்வாதம் இருப்பதை புரிந்து கொள்வார்கள். இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதால் ஏற்படுவது தான் கீல்வாதம். அளவுக்கு அதிகமாக இறைச்சி உண்ணுவதோடு இது தொடர்பை பெற்றிருந்தாலும் கூட பத்தில் ஒருவருக்கு தான் இதனால் கீல்வாதம் ஏற்படுகிறது.

வறண்ட, சீரற்ற சருமம்

அத்தலெட் பாதத்தைப் பெற நீங்கள் ஒன்றும் விளையாட்டு வீரராக இருக்க வேண்டியம் அவசியமில்லை. உங்கள் பாதங்களில் உள்ள சருமம், குறிப்பாக கால்விரல்களுக்கு மத்தியில் வறண்டு, சீரற்ற முறையில், அரிப்பை ஏற்படுத்தினால், இந்த பூஞ்சை தொற்றே அதற்கு காரணமாகும். பாதிக்கப்பட்ட பகுதியில் மருந்து கடையில் வாங்கிய மருந்தை தடவுங்கள். அப்படியும் கேட்கவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்.

வாடையடிக்கும் பாதங்கள்

அதிர்ஷ்டவசமாக வாடையடிக்கும் பாதங்கள் என்பது கொடிய வியாதிக்கான அறிகுறி கிடையாது. சுத்தமில்லாமல் இருப்பதே இதற்கு காரணமாக உள்ளது. அதனால் பாதங்களை சீரான முறையில் கழுவுங்கள். காட்டன் சாக்ஸை அணிவியுங்கள். உங்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்றால் எப்போதும் கையில் மற்றொரு ஜோடி சாக்ஸை வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு டிப்ஸ் வேண்டுமா? ஒரே ஷூவை தினமும் அணியாதீர்கள்.

நடப்பதில் சிரமம்

பாதங்களை ஊன்றி நிற்பதில் சிரமமாக உள்ளதா? அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். கால்சியம் உரிஞ்சப்படுவதில் கடினம், கண்டுபிடிக்கப்படாத முறிவுகள் மற்றும் பசியின்மை போன்றவைகள் எல்லாம் இதற்கு காரணமாக இருக்கலாம். உங்களுக்கு நடப்பதில் சிரமம் என்றால் மருத்துவரை அணுகுவதே சிறந்த யோசனையாக இருக்கும்.

அடிக்கடி ஏற்படும் தசைப் பிடிப்புகள்

உங்களுக்கு அடிக்கடி தசை பிடிப்புகள் ஏற்படுகிறதா? தசைகளை அதிகமாக பயன்படுத்துவதோ அல்லது காயமோ இதற்கு காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. டீ-ஹைட்ரேஷன், ஒன்று அல்லது பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமகளின் குறைபாடு போன்றவைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரத்த ஓட்டத்தில் குறைந்த அளவிலான சோடியம் போன்றவைகளாலும் கூட வலி மிகுந்த தசை பிடிப்புகள் ஏற்படும்.

விளக்க முடியாத அளவில் மரத்துப் போதல்

உங்கள் பாதங்கள் மற்றும் கால்கள் உணர்வில்லாமல் இருந்தால், அதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கண்டிப்பாக ஒரு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி தண்டுவட மரப்பு, நரம்பு பாதிப்பு மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா போன்ற சில முக்கியமான பாதிப்புகளாலும் கூட இது ஏற்படலாம்.

29 1435560313 8 diabeticfoot

Related posts

தலையணையை வைத்து தூங்குபவரா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களே இறுக்கமான உள்ளாடை அணிபவரா நீங்கள்?

nathan

சிறுநீரை அடக்குபவரா நீங்கள்? பாதிப்புக்கள் என்ன?

nathan

உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா?

nathan

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தைகளை முத்தமிட கூடாது என பெரியவர்கள் கூறுவதற்கு இதுதான் காரணம்!

nathan

உங்கள் துணையிடம் அன்பை அதிகரிக்க உரையாடுங்கள்

nathan

நீங்க தவறாம ஃபாலோ பண்ணா போதும்.. சீக்கிரமா உங்க எடை குறையுமாம்…!

nathan

உங்க ஒற்றைத் தலைவலிக்கு என்னதான் தீர்வு? படியுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணை குணமாக்கும் கோவைக்காய்…!

nathan