என்னென்ன தேவை?
வெள்ளைக் கொண்டைக்கடலை – 3/4 கப்,
உப்பு – தேவைக்கு,
தக்காளி – 2,
துருவிய செளசெள – 1/2 கப்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
வெல்லம் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
அரிந்த மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கொண்டைக் கடலையை 8 மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு செளசௌ துருவலை வதக்கி எடுத்துக் கொள்ளவும். தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள் இவற்றுடன் வதக்கிய செளசௌ துருவலையும் சேர்த்து அரைக்கவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த விழுதினை வதக்கி, மஞ்சள்தூள், வெந்த கடலை, கரம் மசாலா, வெல்லம் சேர்த்து எல்லாமாக கொதி வந்ததும் மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.