என்னென்ன தேவை?
தக்காளி – 3,
பீட்ரூட் – 1 துண்டம்,
சோயா கிரானுல்ஸ் – 4 டீஸ்பூன்,
சோள மாவு – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் – சிறிதளவு.
எப்படிச் செய்வது?
தக்காளியையும் பீட்ரூட்டையும் குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் தோலுரித்து ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதை ஒரு கடாயில் போட்டு நன்கு கொதிக்க விடவும். சோள மாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கெட்டியானவுடன் உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். சூப்பை ஒரு கப்பில் ஊற்றி, சோயா கிரானுல்ஸ், வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.