27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
201607271009028911 Tasty and nutritious spices Sweet Corn SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்

மாலை நேரம் சாப்பிட சுவையான சத்தான ஒரு சாட் ரெசிபி இது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்
தேவையான பொருட்கள் :

ஸ்வீட் கார்ன் – ஒரு கிண்ணம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – பாதி
கொத்துமல்லித் தழை – சிறிது
வெண்ணெய் – கால் தேக்கரண்டி
சாட் மசாலா – கால் தேக்கரண்டி
ஓமப் பொடி – சிறிது

செய்முறை:

* வெங்காயம், தக்காளி, கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* ஸ்வீட் கார்னை அரை வேக்காட்டில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு சூடானதும் அதில் உதிர்த்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

* அதனுடன் சாட் மசாலாவைச் சேர்த்து கிளறி இறக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி கலவையை சேர்த்து, ஓமப்பொடி, கொத்துமல்லித் தூவிப் பரிமாறவும்.

* சத்தான சுவையான மசாலா ஸ்வீட் கார்ன் ரெடி.201607271009028911 Tasty and nutritious spices Sweet Corn SECVPF

Related posts

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

nathan

சுவையான வாழைப்பூவில் பக்கோடா

nathan

மாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்

nathan

சோயா இடியாப்பம்

nathan

பானி பூரி!

nathan

சிறு பருப்பு முறுக்கு

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

nathan

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan