25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201607281317553792 symbolize the pain and symptoms of the disease in men SECVPF
மருத்துவ குறிப்பு

ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்

ஆண்கள் முக்கியமாக நீங்கள் சின்ன சின்ன கோளாறு என நினைப்பவை உங்களை பெரிய ஆபத்திற்குக் கொண்டு சென்று விடும்.

ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்
சரியாக உடல்நலத்தின் மீது கவனம் கொள்ளாத காரணங்களினால், ஆண்களுக்கு பல அபாயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. முக்கியமாக நீங்கள் சின்ன சின்ன கோளாறு என நினைப்பவை உங்களை பெரிய ஆபத்திற்குக் கொண்டு சென்று விடும். சாதாரண முதுகு வலி, இடுப்பு வலி, கை கால் வலி என நீங்கள் நினைப்பவை பெரிய ஆபத்துகளுக்கான அறிகுறிகளாக கூட இருக்கலாம் என்பது தான் உண்மை.

இந்த உண்மையைத் தெரியாமல், பல ஆண்கள் சாதாரண வலி நிவாரண மாத்திரைகள் அல்ல தைலத்தை தேய்த்துக் கொண்டு, காலையில் எழுந்து மறுபடியும் அன்றாட வாழ்க்கையை தொடங்குகின்றனர். ஆண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.

உங்களது இடுப்பு மற்றும் விலா எலும்புகளுக்கு மத்தியில் ஊசி வைத்து குத்துவது போல வலி ஏற்படும். பலர் இது சாதாரண முதுகு வலி என நினைத்து விட்டுவிடுகின்றனர். ஆனால், இது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான அறிகுறி என யாருக்கும் தெரிவதில்லை. பத்தில் ஒரு ஆணுக்கு இந்த பிரச்சனையால் சிறுநீரக கல் கோளாறு ஏற்படுகிறது.

ஏதோ காலில் குத்துவது போல வலி இருக்கும், நம்மில் பலர் இதன் விபரீதங்களை அறிந்துக் கொள்வது இல்லை. இவ்வாறு குதிகாலில் வலி அடிக்கடி வந்தால், இது முதுகுத்தண்டு தட்டு நெகிழ்தலாக கூட இருக்க நிறைய வாய்ப்புள்ளது. எனவே, சரியான மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது அவசியமாகும்.

நேற்றிரவு சாப்பிட்ட உணவின் காரணமாக தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது. பல் துலக்கினால் எல்லாம் சரியாகிவிடும் என பலர் நினைப்பதுண்டு. ஆனால், சிலருக்கு என்ன செய்தாலும் வாய் துர்நாற்றம் சரியாகாது. அவர்களும் இதைப்பற்றி அவ்வளவு பெரிதாய் நினைவில் கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், தொடரும் வாய் துர்நாற்றம் நுரையீரல், கல்லீரல் நோய்களுக்கான அறிகுறி என்பதை நாம் அறிவதில்லை. ஏன் இது கல்லீரல் செயலிழப்பிற்கான அறிகுறியாக கூட இருக்காலாம்.

பெரும்பாலும் வயிற்றுப்போக்கு உணவு செரிமான கோளரின் காரணமாக தான் நடக்கிறது. ஆயினும் சில சமயம் காரணமின்றி சிலருக்கு வயிற்று போக்கு தொடர்ச்சியாக ஏற்படும், இவை ஆண்களுக்கு தசைகளை சோர்வூட்டும், முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுத்தும் மற்றும் தைராய்டு உருவாகவும் காரணமாக அமையும். எனவே, எந்த உடல் சார்ந்த பிரச்சனைகளும் காரணங்கள் இன்றி ஏற்படுவது போல இருந்தால். உடனடியாக மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

இன்று ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக இருக்கின்றது விறைப்பு தன்மை கோளாறு. இதற்கு பலவிதமான மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன, அவை பலனும் அளிக்கிறது. ஆனால், இது ஓர் அபாய நோயிற்கான அறிகுறியும் கூட, பார்க்கின்சன் (Parkinson Disease) இது நரம்பியல் சார்ந்த நோய் ஆகும். இது நேரடியாக மூளையை பாதிக்கும் நோய் என்பது குறிப்பிடத்தக்கது. இதுப்போன்ற கோளாறுகள் ஏற்படும் போது மற்றவர்கள் சொல்லும் மருத்துவத்தை தவிர்த்து, குறித்த மருத்துவரிடம் சென்று ஆலோசித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.

பொதுவாக அலுவலகத்தில் நீண்ட நேரம் நின்று வேலை செய்தாலோ, அதிக நேரம் நடந்தாலோ கூட ஏற்படும் இந்த கால் வலி. ஆனால் இது இதய கோளாறுகளுக்கும் ஓர் அறிகுறி என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மேலும் முதுகுத்தண்டு கோளாறுகளுக்கும் கூட இது அறிகுறியாக திகழ்வதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர்.201607281317553792 symbolize the pain and symptoms of the disease in men SECVPF

Related posts

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட குப்பைமேனி மூலிகை !!

nathan

சூப்பர் டிப்ஸ்! உடலை புழுக்களின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முதல் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

nathan

தெரிஞ்சிக்கங்க… மூக்கு ஒழுகாமல் தடுப்பது எப்படி? செலவில்லாமல் எப்படி விரட்டலாம்?

nathan

அரிசியா, கோதுமையா? – நீரிழிவு நோயாளிகள் எதை சாப்பிடலாம்

nathan

பருவம் அடையும் பெண்களுக்கு என்னென்ன சொல்லி தரவேண்டும்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு கர்ப்பிணி பெண்கள் எப்படி தயாராக இருக்க வேண்டும் தெரியுமா?

nathan

உங்கள் குழந்தையின் முக்கியத்துவம் நிறைந்த முதல் பிரஷ்

nathan

ஆண்மை பிரச்சனைகளை தீர்க்கும் இயற்கை வயாகரா அமுக்கிராகிழங்கு

nathan