சிலர் எப்போது பார்த்தாலும் அரித்துக் கொண்டே இருப்பார்கள். பொது இடம் என்று கூட பார்க்க மாட்டார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் முகம் சுளித்தாலும், அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அது எவ்வளவு கொடுமையானது என்று.
சரும பிரச்சனை, கால நிலை மாற்றம், அலர்ஜி என பல காரணங்களால் அரிப்பு ஏற்படுகிறது. இதை குறைக்க நீங்கள் என்னதான் பல க்ரீம்களை பூசினாலும். அது தற்காலிக தீர்வை தான் அளிக்குமே, தவிர நிரந்திர தீர்வை அளிக்காது.
அதே போல நீங்களும் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம். சரியாக தேய்த்து குளிக்க வேண்டும், உள்ளாடைகளை ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, புதியதை மாற்ற வேண்டும். இனி அரிப்பை குறைக்க உதவும் எளிய இயற்கை மருத்துவ முறைகள் பற்றி பார்க்கலாம்…
மருத்துவ முறை #1 கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் அரிப்பு குறையும். மற்றும் இது டால் சருமத்தில் உருவாகும் சிறு புண்கள் சரியாகவும் சிறந்த பயனளிக்கிறது.
மருத்துவ முறை #2 தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவை வந்தால் விரைவில் அரிப்பு குறையும்.
மருத்துவ முறை #3 அரிப்பு ஏற்படும் இடத்தில் சுடு சாதம் மற்றும் மஞ்சளை அரைத்து தடவி வந்தால் அரிப்பு குறையும்.
மருத்துவ முறை #4 சர்க்கரை சேர்த்த பாலில், சுத்தமான மஞ்சள் இரண்டு டீஸ்பூன் சேர்த்து பருகி வந்தால் உடலில் அரிப்பு தன்மை குறையும்.
மருத்துவ முறை #5 கற்பூரவல்லி சாற்றுடன் திருநீற்று பச்சிலை சாறு சேர்த்து அரிப்பு உண்டாகும் இடத்தில் தடவி வந்தால் அரிப்பு குறையும்.