27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
how to make Potato Rice Ball Recipe
சிற்றுண்டி வகைகள்

உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ்

மீந்துபோன சாதத்தை வைத்து மிகவும் சுவையான எளிமையான உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ் ஸ்நாக்ஸ் செய்யலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ்
தேவையான பொருட்கள் :

மீதமுள்ள வெள்ளை சாதம் – 2 கப்
நடுத்தர உருளைக்கிழங்கு – 200 கிராம்
வெங்காயத்தாள் – 1 சிறிய கொத்து (4-5 தண்டுகள்)
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 2
எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி
காய்ந்த ஆரிகனோ (Oregano) – 1 தேக்கரண்டி
கொரகொரப்பான பொடித்த மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :

* உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோலை நீக்கி மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

* அதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாக மசிக்கவும்,

* அடுத்து வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகு தூள், காய்ந்த ஆரிகனோ, உப்பு சேர்த்து நன்றாக பிசைத்து கொள்ளவும்.

* பிசைத்த கலவையை வேண்டிய வடிவில், வேண்டிய அளவில் உருட்டி வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* சுவையான உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ் ரெடி.

* இதை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

குறிப்பு :

* காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் இவ்வாறு ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
how to make Potato Rice Ball Recipe

Related posts

சோளம் – தட்ட கொட்டை சுண்டல்

nathan

சுவையான சத்தான மேத்தி தெப்லா

nathan

பூசணி உலர் திராட்சை ரெய்தா

nathan

சிக்கன் கட்லட்

nathan

அசால்ட்டாக செய்யலாம் அதிரசம்!

nathan

கேழ்வரகு கொழுக்கட்டை

nathan

பிரெட் - அவல் சப்பாத்தி

nathan

ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

சத்தான கோதுமை ரவா தோசை

nathan