27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
201607260720438051 how to make horse gram bajra adai SECVPF
சிற்றுண்டி வகைகள்

கம்பு – கொள்ளு அடை செய்வது எப்படி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த அடையை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கம்பு – கொள்ளு அடை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கம்பு (காட்டு கம்பு என்று கேட்டு வாங்கவும்) – 1 கப்,
புழுங்கல் அரிசி – 1 கப்,
துவரம் பருப்பு – கால் கப்,
கடலைப் பருப்பு – கால் கப்,
கொள்ளு – 1/4 கப்,
உளுந்து – 1/4 கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
காய்ந்த மிளகாய் – 6 (காரத்துக்கு தேவையான அளவு),
சீரகம் – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
பூண்டு – 4 பல்,
கறிவேப்பிலை – சிறிது,
இஞ்சி – 1 துண்டு,
தூளாக்கிய வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைப் பயறு (தோலுடன்) – 1/2 கப்.

செய்முறை :

* அரிசி, கம்பு, பருப்புகள், கொள்ளு ஆகியவற்றை தனித்தனியாக இரவே ஊற வைக்கவும். அவற்றுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து இட்லிக்கு அரைப்பதைவிட சிறிது கரகரப்பாக அரைக்கவும்.

* சீரகம், பெருங்காயம், பூண்டு, இஞ்சி, வேர்க்கடலையை பொடித்து கொள்ளவும்.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடித்த மசாலா, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி 30 நிமிடம் வைத்திருக்கவும். கெட்டியாக இட்லி மாவு பதத்தில் மாவுக் கலவை இருக்க வேண்டும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி வோட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான சூடாக கம்பு – கொள்ளு அடை ரெடி.

* இதை வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.201607260720438051 how to make horse gram bajra adai SECVPF

Related posts

பனீர் சாத்தே

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா

nathan

கோதுமை கேரட் அடை

nathan

சப்பாத்தி – தால்

nathan

சத்தான சுவையான கோதுமை காக்ரா

nathan

சில்லி சப்பாத்தி

nathan

பாட்டி

nathan

பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி

nathan

சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்

nathan