தேவையான பொருட்கள்:
அவல் – 2 கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – அரை கப்
முந்திரி – 15
ஏலக்காய் – 3
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
செய்முறை:
தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
பின் அவலை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடர் கலந்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும், அவலைச் சேர்த்து வேகவிடவும்.
அவல் வெந்து வரும் போது, சர்க்கரையைச் சேர்க்கவும்.
சர்க்கரை சேர்த்த பின், இளகி கெட்டியான பதம் வந்ததும் நெய் சேர்க்கவும்.
நெய் பிரிந்து வரும் போது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
நாவில் எச்சில் ஊறவைக்கும் அவல் கேசரி ரெடி.