என்னென்ன தேவை?
ஸ்பெகடி – 400 கிராம்,
பாலக் கீரை – 2 கட்டு,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயம் – 2,
பூண்டு – 4 பல் (பொடியாக அரிந்தது), மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கேப்ஸிகம் – 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக அரிந்தது),
கேரட் – 3 டேபிள்ஸ்பூன் (பொடியாக அரிந்தது),
வறுத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி, தக்காளி பியூரி – 1/4 கப்,
வால்நட் – 5, எண்ணெய் + பட்டர் – 2 டேபிள்ஸ்பூன்,
ஆலிவ் ஆயில் – சிறிது.
எப்படிச் செய்வது?
பாலக் கீரையுடன் வால்நட், பச்சை மிளகாய், சிறிது உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஸ்பெகடியை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வேக வைத்து, வடித்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தை காய வைத்து அதில் எண்ணெய் + பட்டர் போட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி கேரட், தக்காளி பியூரி, கேப்ஸிகம் சேர்த்து அரைத்த பாலக்கையும் சேர்த்து வேக வைக்கவும். பிறகு வேக வைத்த ஸ்பெகடி சேர்த்து நன்கு கிளறி, கடைசியாக வறுத்த வேர்க்கடலையைத் தூவி இறக்கவும்.