chickenfry
அசைவ வகைகள்

சூப்பர் தயிர் சிக்கன் : செய்முறைகளுடன்…!

தேவையானவை

கோழி – அரை கிலோ
மிளகுதூள் – ஒரு தேக்கரண்டி
பூண்டுதூள் – 1 1/2 தேக்கரண்டி
தயிர் – 4 தேக்கரண்டி
ப்ரட் க்ரம்ஸ் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
உப்பு – அரை தேக்கரண்டி

செய்முறை
கோழியை சுத்தம் செய்து தேவையான அளவில் நறுக்கி வைக்கவும். மற்ற பொருட்கள் அனைத்தையும் தயாராய் வைக்கவும்.
கோழியில் மிளகுதூள், பூண்டுதூள், உப்பு இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டவும்.

பின் அவற்றுடன் தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும். இந்த கலவை சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும்.

ப்ரட் க்ரம்ஸை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

ஊறின கோழியை ஒவ்வொன்றாக எடுத்து ப்ரட் க்ரம்ஸில் போட்டு எல்லா பக்கமும் படுமாறு பிரட்டி எடுக்கவும்.

பிரட்டி எடுத்த கோழிகளை இவ்வாறு எண்ணெயில் போட்டு பொரிக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து எல்லா பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான தயிர் சிக்கன் தயார்.chickenfry

Related posts

சூப்பரான பசலைக்கீரை பக்கோடா

nathan

“நாசிக்கோரி”

nathan

சுவையான கோழி கட்லட் இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

சுவையான கிராமத்து மீன் குழம்பு

nathan

சிக்கன் லாலிபாப் / Chicken Lollipop

nathan

பேபி கார்ன் 65

nathan

பஞ்சாபி சிக்கன்

nathan

சுவையான செட்டிநாடு நாட்டுக்கோழி வறுவல்

nathan

வறுத்தரைச்ச மீன் குழம்பு

nathan