25.5 C
Chennai
Tuesday, Dec 31, 2024
thamannaaa
இளமையாக இருக்க

பெண்கள் உங்கள் உடம்பை ஸ்லிம்மாக அழகாக வைத்துக் கொள்வது எப்படி?

இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை இது எல்லாம் செய்வதில்லை.

உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம்.

மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல்.

உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள் போதுமானவை.

தவிர்க்க வேண்டியவைகள்:
முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க.

அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க.வேக வேகமா அவசரமா சப்பிடாதீங்க..

அது உங்கள் டைஜசனை பாதித்து அதிக கொழுப்பு சதைகளை அங்க அங்க ஏற்பட வழிவகுக்கும்.

உங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும், பொழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும்.

வீட்டுக்கு வேலைக்கு ஆள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை எண்ணிக்கொண்டு யோசிக்கவும்.

மதியம் தூக்கம் கட்டாயம் வேண்டாம்.

அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்:

இடுப்பில்:
பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.

நல்ல நடைபயிற்சி மிக முக்கியம்.

நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.) நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும்.

இதை போல் 2 பக்கமும் 10 முறை செய்யவும்.

இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும். எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும்.

இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும்.

தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் 10 முறை செய்யவும்.

இடுப்பு மற்றும் தொடைக்கு:
சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 10முறையாவது மாடிப்படி ஏறி இறங்கவும்.

நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி செய்யவும்.

நன்றாக நடக்கவும். அப்ப தான் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.

கைகளுக்கு:
இதுக்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை சரியாக செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும்.

இதுவே நல்ல பயிற்சி. முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி.

கழுத்துக்கு கீழ் தொங்கும் சதை:
சிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை. இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 10 முறை செய்யவும்.

முகத்தை இட-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும்
.
முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது போன்ற உடல்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது.thamannaaa

Related posts

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான‌ 10 மிக முக்கியமான வைட்டமின்கள்,beauty tips only tamil,tamil beauty tips in tamil

nathan

வயதானாளும் இளமையாக இருக்க இயற்கை வழிகள்

nathan

ஒரே வாரத்தில் உங்கள் இளமையை திரும்ப பெற வேண்டுமா? இதைப் படிங்க.

nathan

என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள, இதப்படிங்க!

nathan

இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்

nathan

பெண்களுக்கு பயனுள்ள 15 கட்டளைகள்

nathan

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்கனுமா? இந்த ஒரு வழியை ட்ரை பண்ணுங்க

nathan

உங்களை எப்பவும் இளமையாக வைக்க இந்த 5 அரிய மூலிகைகள் முக்கியம் !!

nathan

பெண்களின் முன்னழகை அழகாக்கும் இயற்கை வழிகள்

nathan