குழம்பு வகைகளில் சுண்டைக்காய் வத்தக்குழம்பு மிகவும் சுவையானது. வீட்டில் செய்வதும் மிகவும் சுலபமானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
காய்ந்த சுண்டைக்காய் – 1/2 கப்
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் – 1/4 கப்
உப்பு – தேவையானது
மிள்காய் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியாதூள் – 1 டீஸ்பூன்
தாளிக்க :
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – 1 துண்டு
செய்முறை :
* சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
* பூண்டு, சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
* புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
* வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்தபின் உரித்த பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் அதில் புளிக்கரைசல், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
* குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலந்து இறக்கவும்.