29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201607191211010672 Ways to improve the relationship between the working couple SECVPF
மருத்துவ குறிப்பு

வேலைக்கு போகும் தம்பதியர் இடையே உறவை மேம்படுத்த வழிகள்

`உங்கள் உரையாடும் திறனை வளர்ப்பதன் மூலம், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஆன அன்பு அதிகரித்து உங்கள் உறவை பாதுகாப்பாகவும் வைக்க முடியும்.

வேலைக்கு போகும் தம்பதியர் இடையே உறவை மேம்படுத்த வழிகள்
இன்றைய கால கட்டத்தில், மரியாதைக்குரிய உறவுள்ள தம்பதியர்கள், தங்களுடைய வேலையின் காரணமாக தங்களுக்குள் நல்ல உறவு மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் உள்ளனர். வெளிப்படையான, உண்மையான மற்றும் நேர்மறையான உரையாடும் திறன் மட்டுமே ஒரு நல்ல மற்றும் சந்தோஷமான உறவு முறையை ஏற்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும். தொடர்பு இன்மையால் நிறைய விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

தம்பதியருக்குள் ஏற்படும் வாதங்கள், சண்டைகள் மற்றும் முன்னும் பின்னுமாக பேசுவது போன்றவற்றை அவர்களுடைய திருப்தியான உறவு முறையால் மட்டுமே தவிர்க்க முடியும். யாராவது ஒருவர் விட்டுக்கொடுப்பது, பிரச்சனையை நல்ல வழியில் மாற்றி செலுத்த உதவுகிறது. தனிப்பட்ட வேலையால், தம்பதியர் சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் இருப்பதால், உங்கள் உறவு மற்றும் தொடர்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.

நீங்கள் வெளியிலேயே அதிக நேரம் செலவிடுதலால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு, உங்கள் உறவு முறை பாதிக்கப்படுகிறது. இதனால் யாராவது ஒருவர் முதிர்ச்சியுடன் கவனமாக செயல்பட்டு இந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரம் ஒதுக்குவதன் மூலமும், வெளியில் அழைத்து செல்வதன் மூலமும் உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை நல்ல வழியில் சரி செய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் துணையிடம் ஒவ்வொரு நாளும் உங்கள் நாள் கழிந்த விதத்தையும், நீங்கள் வேலை செய்த இடத்தில் நடந்த சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் துணையிடம், உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் நேர்மை இல்லாவிடில், உங்கள் உறவிற்கு எந்த மதிப்பும் இல்லை. உறவில் ரகசியமும், பொய்யும் இல்லாமலிருந்தால், எளிமையாகவும், சிக்கல் இல்லாமலும், குழப்பம் இல்லாமலும் உறவு விளங்கும்.

ஒவ்வொருவரும் அவர்களுடைய துணையிடம் பேசும் போதும், அவர்கள் கூறுவதை கேட்கும் போதும் கவனத்துடன் செயல் பட வேண்டும். உங்களுடைய துணை பேசும் போது, அவர்கள் பேசுவது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும். மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மரியாதைக் குறைவால் தான், பெரும்பாலான திருமணங்களில் சண்டைகளும் மோதல்களும் ஏற்படுகின்றன.

கட்டாயப்படுத்துதல் மற்றும் தொழிலில் தாழ்வு போன்றவைகளும் சில நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன. எனவே மரியாதை கொடுத்தலும், வாழ்வின் எந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தலும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான வழியாகும்.201607191211010672 Ways to improve the relationship between the working couple SECVPF

Related posts

அதிமதுரம் கஷாயம் குடிப்பதன் நன்மைகள்!

nathan

தலை பாரத்திற்க்கான சித்த மருந்து

nathan

மூட்டுவலிக்கு தீர்வு. ஆர்த்தோகைன் தெரப்பி!

nathan

நம்பிக்கை தான் வாழ்க்கை

nathan

இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கோபம்

nathan

கருவுறுதல் சிகிச்சைக்கு செல்வதற்கு முன் தம்பதிகள் இருவரும் என்ன செய்யணும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க… உங்கள் நகங்களில் இப்படி தென்பட்டால் உயிருக்கே ஆபத்து!

nathan

மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் மார்பகங்கள் வலிப்பதேன்?

nathan

படிக்கத் தவறாதீர்கள்… கண் பார்வையை மேம்படுத்த செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan