24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
10 1436529220 5 cataract
மருத்துவ குறிப்பு

பொதுவான கண் பிரச்சனைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்!!!

உங்கள் கண்கள் உலகின் ஜன்னல்கள். கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் போது, அது உங்களுக்கு மற்றும் உங்கள் உடலுக்கு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் ஒவ்வொரு நாளும் செயல்படுவதற்கு பார்வை பெரும் பங்காற்றுகிறது.

உங்கள் கண்களில் பெரிய பிரச்சனை தொடங்கும் போது, நிரந்தர அல்லது சரியான பராமரிப்பு இல்லாததால் கண்கள் ஏதேனும் பாதிப்பு அடைந்துள்ளதா என்பதை நீங்கள் கண்டிப்பாக கண் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

மிதவைகள் (Floaters)

உங்கள் கண்களில் குறிப்பிடத் தகுந்தது கண் மிதவைகள். இவை மிகவும் சிறிய புள்ளி போன்றவை. மேலும் இவை கண்களுக்குள் உள்ள பகுதிகளில் மிதந்து கொண்டிருக்கும்.சில மிதவைகள் உங்கள் பார்வையில் நிழல்களாகத் தோன்றலாம். இவை உங்கள் கண்களில் உள்ள திரவத்தில் இருப்பதால் நீங்கள் நகரும் போது இவையும் நகரும். நீங்கள் உங்கள் கண்களில் அவை இருக்கும் இடத்தை தீர்மானிக்க முயற்சி செய்யும் முன்னரே உங்கள் கண்களின் இயக்கத்தால் அது உங்கள் பார்வையில் இருந்து மறைந்து விடும். அவை ஒன்று மட்டும் இரண்டு கண்களிலும் இருக்கலாம். இவை வயது தொடர்பான மாற்றங்களால் ஏற்படலாம். கண்களில் சேரும் தூசிகள், மற்றும் கண்ணில் உள்ள திரவங்களும் இதற்கு காரணம். இவை கண்களில் காயம் மற்றும் கண் கட்டிகள் ஏற்படும் போதும் உண்டாகலாம். பல மிதவைகளுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. அவை உங்கள் பார்வையை பாதிப்பதாக இருந்தால் லேசர் சிகிச்சை அல்லது விட்ரெக்டொமி எனப்படும் மலட்டு உப்பு தீர்வு போன்றவை தீர்வாகலாம். இவை இயற்கையாகவே திரவத்தை பதிலீடு செய்து கொள்ளும்.

கண்கள் உலர்தல் (Dry Eyes)

கண்கள் குறித்த மற்றொரு பிரச்சனை உலர் கண் என்று குறிப்பிடப்படுகிறது. கண் உராய்வின் போது போதுமான அளவு கண்ணீர் அல்லது பராமரிப்பு இல்லாத போது இது ஏற்படும். இவை கண்களை எரிய செய்யும் மற்றும் சங்கடமான நிலையை உருவாக்கும். நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவது மற்றும் வெளியே காற்றில் அதிக நேரம் இருப்பதால் கண் உலர்கின்றது. இந்த நிலை தொடரும் போது மருத்துவரை அணுக வேண்டும். கண்கள் உலர்வதர்கான சிகிச்சையானது கண்களில் ஈரப்பதத்தை தக்க வைக்க மருந்து விடுதல் போன்று எளிமையானதாகவே இருக்கும். நாள்பட்ட பிரச்சனையாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் கண் இமைகளின் மூலையில் உள்ள வடிகால் ஓட்டையை அடைத்து கண்களில் நீரை தக்க வைக்க செய்ய வேண்டும்.

விழி வெண்படல அழற்சி (Conjunctivitis)

விழி வெண்படல அழற்சி என்பது மற்றொரு கண் குறித்த பிரச்சனை ஆகும். இது வலி, அரித்தல் மற்றும் கண்கள் சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. கண் இமைகளில் வீக்கம் மற்றும் கார்னியா போன்றவற்றால் இது ஏற்படுகின்றது. பொதுவாக விழி வெண்படல அழற்சி தூசி மற்றும் ஒவ்வாமையால் ஏற்படுகின்றது. சொட்டு மருந்து, வீட்டில் தூசியை குறைத்தல், இன்டோர் காற்று சுத்தப்படுத்தியை பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலமாக இக்குறைபாட்டை சரிபடுத்தலாம்.

உராய்வுகள் (Abrasions)

உராய்வுகள் என்பது கார்னியாவில் கீறல்கள் விழுவது போன்றதாகும். இவை தூசி மற்றும் காண்டாக்ட் லென்ஸ் மூலமாக ஏற்படலாம். இவற்றிற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை செயும் போது சன் கிளாஸ் அல்லது காப்புக் கண்ணாடி பயன்படுத்துவதன் மூலம் இதனை தடுக்க முடியும். உராய்வுகள் தொற்றை ஏற்படுத்தினால் கண்களுக்கு ஆன்டி-பயாடிக் கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.

கண் புரை (Cataracts)

கண் புரை என்பது கண்களின் விழிகளில் உள்ள லென்ஸ்களில் வெண்மையாக மேகம் போல் தோன்றுவது ஆகும். சூரிய வெளிச்சத்தில் நீண்ட நேரம் இருத்தல், புகைத்தல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை இருப்பது போன்றவை மூலம் இது ஏற்படுகிறது. இது உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதுடன், இரவு பார்வையையும் முடக்குகின்றது. கண்புரை, இரட்டை பார்வையையும் ஏற்படுத்தும். கண்புரை அறுவை சிகிச்சை லென்ஸில் உள்ள மேகமூட்டம் போன்ற அமைப்பை நீக்கி உங்கள் பார்வையை மேம்படச் செய்யும். நம் அன்றாட வேலைகளை செய்வதற்கு கண்கள் மிகவும் முக்கியமானதாகும். எனவே கண் பார்வை பாதிப்பில் இருந்து உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

10 1436529220 5 cataract

Related posts

கமலம் பாத கமலம்! -பத்திரம்

nathan

தெரிஞ்சிக்கங்க… அடிக்கடி முதுகு வலிக்குதா? அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்…

nathan

குரலில் மாற்றமா? கவனம் தேவை

nathan

இன்றைய காலத்தில் மங்கையரை வருத்தும் மாதவிடாய் பிரச்சினை

nathan

நீங்கள் 2 மாதம் வெந்தய நீரில் தேன் கலந்து குடித்தால், எந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரையும் என்று தெரியுமா?

nathan

உங்கள் காது இந்த ஆபத்தான நோய்களின் அறிகுறிகளையெல்லாம் சொல்லும் என்பது தெரியுமா?

nathan

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை போக்கும் கருஞ்சீரகம்

nathan

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத நெகடிவ் வார்த்தைகள்

nathan

தலைவலி வந்ததும் முதலில் இதை ட்ரை பண்ணுங்க…..!

nathan