ஒவ்வொரு விளையாட்டிற்கும் அதற்கு உண்டான வளைந்து கொடுக்கும் தன்மையை ஈட்ட உடற்பயிற்சிகள் உண்டு. அந்த விளையாட்டின் தேவைக்கேற்ப வளையும் தன்மை பயிற்சி செய்யப்படுகிறது. குறிப்பாக தசைகளையும், இணைப்புகளையும் பலப்படுத்த இந்தப் பயிற்சிகள் தரப்படுகின்றன.
ஓடுபவர்களுக்கென்று தனிப்பட்ட வளையும் தன்மையை வளர்க்கும் உடற்பயிற்சிகள் உண்டு. இவற்றைச் செய்த பின்னரே ஓட ஆரம்பிக்க வேண்டும். கராத்தே பயிலுபவர்கள் முதலில் தயார் (Warm Up) பயிற்சி செய்கிறார்கள். இதில் பெரும்பான்மையான பயிற்சிகள் வளையும் தன்மைக்கான உடற்பயிற்சிகள்தான்.
தயார் நிலை பயிற்சிகளை செய்து முடித்த பின் படிப்படியாக உடற்பயிற்சியை செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் நாம் செய்யும் உடற்பயிற்சி ஏற்ற வகையில் நம் உடல் தகுதி அடைய தொடங்கும் என வல்லுநர் தெரிவிக்கின்றனர்.