28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
18 1416306333 1 bathroom
மருத்துவ குறிப்பு

பாத்ரூமில் லைட்டிங் செய்வது எப்படி? இதோ 7 குறிப்புகள்!!

நம் வீட்டில் உள்ல முக்கியமான அறைகளில் ஒன்று குளியலறை ஆகும். குளியலறையை அருமையாக நாம் அலங்காரம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நம் உடம்பை சுத்தமாக்கிக் கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் தான் குளியலறையில் ஒதுக்கிக் கொள்கிறோம். குறைவான நேரம் தான் அங்கு இருக்கிறோம் என்றாலும், நம் குளியலறை எப்போதும் சுத்தமாகவும், வெளிச்சமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

பெரிய அபார்ட்மெண்ட் வீடுகள் மற்றும் தனி வீடுகளைத் தவிர, நம் நாட்டில் பெரும்பாலான வீடுகள் பகலில் கூட இருட்டாகத் தான் இருக்கும். ஒரு லைட் போட்டுக் கொள்ளாமல் அதற்குள் நுழையவே முடியாது. வெளிச்சமாக இருக்கும் என்று கூறிக் கொண்டு, பலரும் குளியலறையில் ஜீரோ வாட்ஸ் பல்பு ஒன்றைத் தான் பொருத்தியிருப்பார்கள்.

அதைத் தவிர்த்து, நல்ல வெளிச்சம் தரும் வகையிலான பல்புகளை குளியலறையில் பொருத்துவது அவசியம். அதற்கான சில குறிப்புகளை இப்போது நாம் பார்க்கலாம்.
18 1416306333 1 bathroom
டாஸ்க் லைட்டிங் குளியலறையில் டாஸ்க் லைட்டிங்கை வைத்துக் கொள்வது நல்லது. பெரிய குளியலறை என்றால் இரு லைட்டுகளும், சிறியதென்றால் ஒரே ஒரு லைட்டும் பொருத்திக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும் குளியலறை முழுவதும் வெளிச்சமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
18 1416306339 2 bathroom
கண்ணாடிக்கு மேல்… குளியலறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடிக்கு மேல் லைட்டைப் பொருத்தினால், சில சமயம் அதன் நிழலில் நம் முகம் மறைக்க வாய்ப்புள்ளது. கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் அளவுக்கு அந்த லைட்டை அட்ஜஸ்ட் செய்து பொருத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால் கண்ணாடியின் மேல் பாகத்திலேயே பொருத்தி விடலாம். அப்போது தான் நாம் ஷேவ் செய்து கொள்ளவும் எளிதாக இருக்கும்.

எத்தனை வாட்ஸ்? கெஸ்ட் மற்றும் மாஸ்டர் வகை குளியலறைகளில் 75 முதல் 100 வாட்டுகள் வரை திறன் கொண்ட ஃபிக்ஸர் பல்புகளை மாட்டலாம். ஃப்ளோரஸண்ட் மற்றும் எல்.இ.டி. பல்புகள் என்றால், 20 முதல் 26 வாட்டுகள் கொண்ட விளக்கை மாட்டலாம். பவுடர் அறைகளென்றால், 45 வாட்டுகள் கொண்ட பல்பைப் பயன்படுத்தலாம்.

உயரமான குளியலறைக்கு… குளியலறையின் விட்டம் உயரமாக இருந்தால், பெண்டண்ட் ஃபிக்ஸர்ஸைப் பயன்படுத்தி ஆம்பியண்ட் லைட்டிங்கைப் பொருத்தலாம். இதன் அடிப்படையில் அமைந்த விளக்குகள் அனைத்தும் நல்ல வெளிச்சத்தைக் கொடுக்கும்.

அக்செண்ட் லைட்டிங் குளியலறைக்குள் ஒரு ஈர்ப்புத் தன்மை வருவதற்கு, அக்செண்ட் லைட்டுகளைப் பொருத்துதல் நல்லது. ஷவர் பகுதிகளில் 35 டிகிரி கோணத்தில் விளக்கைத் திருப்பிக் கொண்டால், அது குளியலறை டைல்ஸ்களில் பிரதிபலித்து, அறையே பிரகாசமாக ஒளிரும்.

டெக்கரேட்டிவ் லைட்டிங் இவ்வகையிலான விளக்குகளைப் பொருத்தினால் அறையின் வெளிச்சம் இரு மடங்காகும். மேலும், அதிலுள்ள டிசைன்களும் குளியலறையை வேறொரு உலகத்திற்குக் கூட்டிச் செல்லும். சாண்ட்லியர் விளக்குகள் இன்னும் அதிகம் கலக்கும்.

டிம்மர்கள் டிம்மர்கள் மூலம் குளியலறையில் லைட்டிங்கைக் கட்டுப்படுத்தும் முறை இருந்தால் நல்லது. இதன் மூலம், நம் தேவைக்கேற்ப வெளிச்சத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.

Related posts

லவ்வர் வேணுமா… மருந்து சாப்பிடுங்க…

nathan

குளித்து முடித்ததும் வியர்க்கிறதா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

நாம் இறக்கும் வரையில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் 2 உறுப்புகள்…

nathan

மூட்டுவலிக்கு தீர்வு. ஆர்த்தோகைன் தெரப்பி!

nathan

ஏன் பெண்களை மெட்டியும், கொலுசும் வெள்ளியில் அணிய சொல்கிறார்கள் தெரியுமா?

nathan

திறமையை வளர்த்து கொள்ளும் பெண்கள்

nathan

குழந்தை பெற்றெடுத்த ஆண்…பிரிட்டனில் பரபரப்பு!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சிரமமே இல்லாத பிரசவத்திற்கு பழங்கால இந்தியர்கள் கையாண்ட இரகசிய சூட்சமங்கள்!

nathan

உங்க நாக்கை சுத்தம் வைத்து கொள்ள வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan