29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
201607130803579868 Vegetable wheat rava uppuma SECVPF
சிற்றுண்டி வகைகள்

வெஜிடபிள் கோதுமை ரவா உப்புமா

டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிகவும் சிறந்தது. இப்போது இதில் காய்கறிகளை சேர்த்து எப்படி உப்புமா செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

வெஜிடபிள் கோதுமை ரவா உப்புமா
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – கால் கிலோ,
பட்டாணி – 50 கிராம்,
வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
பீன்ஸ் – 4,
கடுகு – கால் டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* வெங்காயம், இஞ்சி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கோதுமை ரவையை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்.

* கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.

* எல்லாம் ஒன்றாகக் கலந்து மணம் வந்ததும், ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு தண்ணீர் விடவும். அது, கொதிக்க ஆரம்பித்ததும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி பிடிக்காமல் கிளறவும்.

* வெந்ததும் எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

* சுவையான சத்தான வெஜிடபிள் கோதுமை ரவா உப்புமா ரெடி.201607130803579868 Vegetable wheat rava uppuma SECVPF

Related posts

தேங்காய்ப்பால் காலிஃப்ளவர் சப்ஜி

nathan

சுறாப்புட்டு

nathan

சிக்கன் மோஜோ பர்கர்

nathan

வாழைப்பூ பச்சடி

nathan

ராகி முறுக்கு: தீபாவளி ரெசிபி

nathan

கம்பு கொழுக்கட்டை

nathan

தேங்காய்-ரவா புட்டு

nathan

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

குரக்கன் ரொட்டி

nathan