25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தல் அழகியாக கறிவேப்பிலை!

hair-careகருப்பு தலைமுடி வெள்ளையாகி கலங்க வைக்கிறதா?

அரை கிலோ நல்லெண்ணையை காய்ச்சி இறக்கியதும், அதில் 50 கிராம் பச்சை கறிவேப்பிலையை போட்டு மூடி விடுங்கள். மறுநாள் இந்த எண்ணையை மிதமாக சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சியக்காய் போட்டு அலசுங்கள்.

வாரம் இருமுறை இப்படி குளித்து வர, நரைமுடிகள் கருமைக்கு மாறிவிடும். இளநரைக்கு இன்னொரு சிகிச்சை… ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து அந்த சாறில், 3 டீஸ்பூன் வெந்தய பவுடரை கலந்து தலைக்கு “பேக்” போட்டு, காய்ந்த பிறகு அலசுங்கள். வாரம் ஒருதடவை இப்படி செய்து வந்தால், சிக்கிரமே இளநரை நீக்கிவிடும்.

பிசுபிசுப்பை போக்க

கறிவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக்காய், செம்பருத்திப் பூ.. மூன்றையும் சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன், வடித்த கஞ்சியை கலந்து தலையில் நன்றாக தேய்த்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்தால் போதும் “பிசுபிசுப்பு” போய்விடும்.

கறிவேப்பிலையில் ஒரு “ஆஹா பேஸ்ட்…”

மருதாணி 1 பிடி, கறிவேப்பிலை 1 பிடி, செம்பருத்தி இலை 1 பிடி, கொட்டை நீக்கிய பூந்திக் கொட்டை 4… இவற்றை முந்தைய நாளே ஊற வையுங்கள். மறுநாள் அரைத்து, தலைக்குத் தேய்த்து அலசுங்கள். இப்படி, வாரம் ஒரு முறை செய்தால் போதும். தலை சுத்தமாகி, கூந்தலில் வாசனைத் தூக்கும்.

“ஜெல் சிகிச்சை”

சோற்று கற்றாழை “ஜெல்”லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அந்த விழுதை “பேக்” போட்டு 15 நிமிடம் கழித்து தலையை அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த “பேக்” போட்டுப் பாருங்கள். தலை குளிர்ச்சியாவதுடன், முடி வளர்ச்சியும் தூண்டப்பட்டு “கருகரு”வென வளர ஆரம்பிக்கும்.

தலை அரிப்புக்கு

சுருள் பட்டை 10 கிராம், பிஞ்சுக்கடுக்காய் 10 கிராம், வெந்தயம் 10 கிராம், கறிவேப்பிலை 10 கிராம், செம்பருத்தி பூ 10 கிராம், ரோஜா மொட்டு 10 கிராம்… இவற்றை ஓரிரண்டாக அம்மியில் நசுக்கிக் கொள்ளுங்கள். பிறகு, அவற்றை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, பத்து நாட்கள் வெயிலில் வைத்து எடுங்கள். இந்த எண்ணெயை தினமும் தடவி வர சகல பிரச்னைகளும் தீர்ந்து, முடி ஆரோக்கியமாக இருக்கும்.

Related posts

முடிக்கு அதிக அளவில் ஈர்ப்பத்தை ஏற்படுத்தி, முடி கொட்டாமல் பார்த்து கொள்ள சில வழிகள்!…

sangika

கரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன….

sangika

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி இலைகளை எப்படி பயன்படுத்துவது? –

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! தலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா?

nathan

தலை அரிப்பு, கூந்தல் வறட்சிக்கு என்ன செய்யலாம்

nathan

வேப்பிலை கூந்தலுக்கு செய்யும் அற்புதத்தை அறிவீர்களா?

nathan

வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட சில பயனுள்ள டிப்ஸ்

nathan

பலவீனமான தலைமுடியை வலிமையாக்க சூப்பர் டிப்ஸ் !

nathan

பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்க செம்பருத்தி மாஸ்க்!

nathan