28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201606291333422669 Men low libido will increase the divorces SECVPF
மருத்துவ குறிப்பு

ஆண்களின் ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்

பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களின் ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்
தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இன்றைய உலகில் சிறு வயதிலேயே பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவற்றினால் குடி, கூத்து என்று இளைஞர்கள் செல்வதால் உண்மையான செக்ஸ் என்று வரும்போது நாட்டமில்லாமல் போய் விடுகிறது.

மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இவையெல்லாம் அவர்களது செக்ஸ் நாட்டமின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது.

இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கமும் செக்ஸ் உறவில் நாட்டத்தை குறைக்கிறது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் பாலுறவின்பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.

உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.

ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.201606291333422669 Men low libido will increase the divorces SECVPF

Related posts

100 ஹெல்த்தி ஹேபிட்ஸ்! ‘நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ !! ஹெ…

nathan

பயணத்தின் போது குமட்டல், தலைவலியை தவிர்ப்பதற்கான ஈசி வழிகள்!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்?

nathan

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா?அப்ப இத படிங்க!

nathan

உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் மாரடைப்புக்கு முன் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தும்!

nathan

உங்களுக்கு அடிக்கடி தலைவலி மண்டைய பொளக்குதா?… சூப்பர் டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா செரிமான கோளாறுகளை தவிர்க்கும் சிகிச்சை முறைகள் என்ன…?

nathan

பரிதவிக்கும் குடும்பங்கள்… பயம் நிறைந்த வாழ்க்கை..

nathan

உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..!

nathan