sl36321
சூப் வகைகள்

பிடிகருணை சூப்

என்னென்ன தேவை?

வெங்காயம் – 1,
தக்காளி – 1,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிது,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 2 பல்,
பிடிகருணை (மசித்தது) – 1 கப்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகு சேர்க்கவும். இஞ்சி, பூண்டு சேர்க்கவும். இத்துடன் தக்காளியைப் போட்டு நன்கு வதங்கியபின் ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றவும். தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் மசித்த கிழங்கு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் கொத்தமல்லி நறுக்கிச் சேர்த்துப் பரிமாறவும்.

sl3632

Related posts

மிக்ஸட் வெஜிடபுள் சூப்

nathan

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்

nathan

மழைக்காலத்துக்கு உகந்த தூதுவளை சூப்

nathan

பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

சத்தான வாழைத்தண்டு – பார்லி சூப்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு- வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும் பூண்டு சூப்

nathan

மட்டன் கீமா சூப் செய்வது எப்படி

nathan

கொண்டைக்கடலை சூப்

nathan

சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்

nathan