25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
sl3629
இனிப்பு வகைகள்

சாக்லெட் மூஸ் (பிரான்ஸ்)

என்னென்ன தேவை?

பால் – 2 கப்,
கோகோ பவுடர் – 4 டீஸ்பூன்,
குக்கீஸ் சாக்லெட் (துருவியது) – 1/2 கப்,
சைனா கிராஸ் – 5 கிராம்,
கஸ்டர்டு பவுடர் – 1 டீஸ்பூன்,
க்ரீம் – 100 கிராம்,
வெனிலா எசென்ஸ் – 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

‘அகர் அகர்’ எனப்படும் சைனா கிராஸை 1 மணி நேரம் 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும். 1/2 கப் பாலில்கஸ்டர்டு பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். மீதி பாலைச் சூடாக்கி அதில் சர்க்கரை, சிறிது பாலுடன் கலக்கிய கோகோவை சேர்த்துக் கலக்கவும். சைனா கிராஸை அடுப்பில் வைத்து நன்றாக கரைந்து கொதிவந்த பின், அதைப் பாலுடன் சேர்க்கவும். இப்போது பால், சர்க்கரை, பாலுடன் கஸ்டர்டு பவுடர் கலந்த கலவை, கோகோ, அகர் அகர் எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் ஏற்றவும். நன்றாக கொதி வந்து கெட்டியான பின் இறக்கி வைக்கவும். ஆறியபின் கெட்டியாக அடித்த க்ரீம், எசென்ஸ் சேர்த்து தடித்த கண்ணாடி கிண்ணங்களில் ஊற்றி செட் செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து சாக்லெட் துருவல், க்ரீம் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.sl3629

Related posts

குழந்தைகளுக்கான கேரமல் கஸ்டர்டு புட்டிங்

nathan

கலர்ஃபுல் மில்க் அகர் அகர்

nathan

சுவையான வாழைப்பழ அல்வா

nathan

சுவையான தேங்காய் அல்வா

nathan

இட்லி மாவில் சுவையான ஜிலேபி செய்ய தெரியுமா ?

nathan

நுங்குப் பணியாரம்

nathan

தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி

nathan

லாப்சி அல்வா

nathan

சுவையான பீட்ரூட் அல்வா

nathan