மொகல் சிக்கன் மிகவும் சுவையாக இருக்கும். இதை இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ருசியான மொகல் சிக்கன் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
சிக்கன் – அரை கிலோ
பட்டர் – 50 கிராம்
ஏலம், பட்டை, கிராம்பு – 4 துண்டுகள் வீதம்
பாதாம் துருவியது – 3 டீஸ்பூன்
உலர்ந்த திராட்சை – 3 டீஸ்பூன்
தயிர் – 100 கிராம்
சீரக பொடி – 1 டீஸ்பூன்
மிளகுப் பொடி – 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் – தேவைக்கு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் நன்றாக கழுவி அத்துடன் 1 ஸ்பூன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெயையும், பட்டரையும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
* பட்டர் உருகியதும் ஏலம், பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் அதில் புரட்டி வைத்துள்ள சிக்கனைப் பரவலாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொறிய விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
* மீதமுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி அதில் பாதாம் துருவல், உலர்ந்த திராட்சை முதலியவற்றைப் போட்டு பொரித்து அதை சிக்கன் மீது தூவி வைக்கவும்.
* ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அதில் மீதமுள்ள மிளகுப் பொடி, சீரகப் பொடி, உப்பு சேர்த்து அடித்துக் கலந்து பொரித்து வைத்துள்ள சிக்கன் மீது ஊற்றி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமான தீயில் சிக்கனை வேகவிடவும்.
* சிக்கன் நன்கு வெந்து நீர் சுண்டியதும் இறக்கி கொத்தமல்லி, எலுமிச்சை சாறு தெளித்துக் கிளறி பரிமாறவும்.