28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
VkWjiKZ
சிற்றுண்டி வகைகள்

சோயா இடியாப்பம்

என்னென்ன தேவை?

சோயா மாவு – 1/2 கப்,
அரிசி மாவு – 1/4 கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
கேரட் – 1/4 துண்டு,
குடை மிளகாய் – 1/2,
தக்காளி – 1,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது.

எப்படிச் செய்வது?

சோயா மற்றும் அரிசி மாவை தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். ஒரு இட்லி தட்டில், துணியில் கட்டி ஆவியில் வேக விடவும். அதில் தண்ணீர் தெளித்து, சிறிது உப்புச் சேர்த்து பிசையவும். ஓமப்பொடி அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைத்து, இடியாப்பத்தை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் காய்கறிகளை சேர்க்கவும். லேசாக வதக்கி, உப்புச் சேர்த்து கலந்து விடவும். ஆறிய இடியாப்பத்தை இக்கலவையில் சேர்த்து, நன்றாகக் கலந்தவுடன் பரிமாறவும்.VkWjiKZ

Related posts

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan

சத்தான சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை

nathan

கார்ன் சீஸ் டோஸ்ட்

nathan

சுவையான வெங்காய பொடி தோசை

nathan

மசாலா பூரி

nathan

சோயா டிக்கி

nathan

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan

காராமணி கொழுக்கட்டை

nathan

பலாப்பழ தோசை

nathan