34.7 C
Chennai
Saturday, Jun 22, 2024
அறுசுவைசைவம்

வாழைக்காய் புட்டு ரெசிபி

11-putturecipe

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 1 (துருவியது)

கைக்குத்தல் அரிசி மாவு – 1 கப்

தேங்காய் – 2 கப் (துருவியது)

உப்பு – 1 டீஸ்பூன்

சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை: முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பின் வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, குக்கரில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் கைக்குத்தல் அரிசி மாவில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் வேக வைத்த வாழைக்காயைசேர்த்து சேர்த்து, புட்டு மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து நீளமாக இருக்கும் புட்டு வேக வைக்கும் பாத்திரத்தில், நான்கில் ஒரு பங்கு மாவைப் போட்டு, அதன் மேல் 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை போட்டு, தேவையான அளவு சர்க்கரையை தூவி விட வேண்டும். பின்னர் மீண்டும் மாவைப் போட்டு, தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து, பாத்திரத்தை மூட வேண்டும். பின்பு அதனை இட்லி பாத்திரம் போல் இருக்கும் குடுவைப் போன்று உள்ள பாத்திரத்தில், பாதி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தண்ணீர் கொதித்ததும், அதில் மூடி வைத்துள்ள புட்டு பாத்திரத்தை வைத்து, இறுக்கமாக மூடி, 20 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது சூப்பரான வாழைக்காய் புட்டு ரெடி!!! இதனை தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Related posts

உருளைக்கிழங்கு பொடி சாதம்

nathan

சுவையான் சில்லி பன்னீர்!…

sangika

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

nathan

சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி

nathan

மேத்தி பன்னீர்

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

அன்னாசிப் பழ ஜாம்

nathan

புதினா பிரியாணி

nathan

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

nathan