26.7 C
Chennai
Tuesday, Feb 18, 2025
201606250850418160 how to make pumpkin halwa SECVPF
இனிப்பு வகைகள்

தித்திப்பான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி

அல்வா பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. இப்போது தித்திப்பான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தித்திப்பான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பூசணிக்காய் – 300 கிராம்
பால் – 500 மி.லிட்டர்
வெல்லம் – 400 கிராம்
முந்திரி – 15
திராட்சை – 15
பாதாம் – 15
நெய் – 250 கிராம்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
ஏலக்காய் – அரை ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

* பூசணிக்காயை தோல் நீக்கி நன்றாகத் துருவி, அதன் சாறைப் பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

* சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.

* பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்கவும்.

* பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் சேர்த்து கொண்டே இருக்கவும்.

* அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு, பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும்.

* மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும்.

* கடைசியாக அல்வா பதம் வந்தவுடன் (ஓரங்களில் நெய் வெளிவர ஆரம்பிக்கும் போது) ஏலக்காய்த் தூள், வறுத்த திராட்சை, முந்திரி, பொடித்த பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும்.

* நாவூறும் சூடான சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.201606250850418160 how to make pumpkin halwa SECVPF

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான பால் ரவா கேசரி

nathan

வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி

nathan

சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை

nathan

கோதுமை ரவா கேசரி

nathan

தேங்காய் பர்ஃபி

nathan

குலாப் ஜாமுன் Gulab Jamun using Milk Powder

nathan

பூசணி விதை பாதாம் பர்பி

nathan

சூப்பரான சாக்லேட் குஜியா

nathan

சுவையான தேங்காய் போளி செய்வது எப்படி

nathan