29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
14 1436873524 8 fever sick
மருத்துவ குறிப்பு

‘வைரஸ் காய்ச்சல்’ குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

காலநிலை மாறும் போது பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். அதில் ஒன்று தான் வைரஸ் காய்ச்சல். தற்போது ஆங்காங்கு டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், வைரஸ் காய்ச்சலையும், டெங்கு காய்ச்சலையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இந்த இரண்டு காய்ச்சலுக்கும் வெவ்வேறு வைரஸ்கள் காரணம் மற்றும் அறிகுறிகளும் வேறுபடும்.

வைரஸ் காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள் மற்றும் தலைவலியை உணரக்கூடும். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம்.

ஆனால் அதற்கு ஒவ்வொருவரும் முதலில் இந்த வைரஸ் காய்ச்சல் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சரி, இப்போது அந்த வைரஸ் காய்ச்சல் பற்றி காண்போமா!!!

வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள்

வைரஸ் காய்ச்சல் இருந்தால், நிறைய அறிகுறிகள் தென்படும். அதில் முக்கியமான அறிகுறிகளென்றால், காய்ச்சல், மிகுந்த சோர்வு, குமட்டல், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள், கடுமையான தலை வலி, இருமல், தொண்டைப்புண், அடிவயிற்றில் வலி போன்றவை முக்கியமானவை.

வைரஸ் காய்ச்சல் எப்படி உடலை பாதிக்கிறது?

வைரஸ் காய்ச்சல் வந்தால், அவற்றை உண்டாக்கும் வைரஸ் செல்களை தாக்கும். குறிப்பாக சுவாச மண்டலத்தை தான் வைரஸ் காய்ச்சல் வெகுவாக பாதிக்கும். ஒருவேளை வைரஸ் மிகவும் சக்தி வாய்ந்ததெனில், அதனால் நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்பட்டு, அதனால் தீவிரமான பிரச்சனையையும் சந்திக்கக்கூடும்.

வைரஸ் காய்ச்சல் ஆபத்தானதா?

ஆம், வைரஸ் காய்ச்சல் மிகவும் ஆபத்தானது. ஒருவேளை பாதிக்கப்பட்ட நோயாளி மிகவும் பலவீனமானவராக இருந்து, எதையும் உட்கொள்ள முடியாமல் தவித்தால், அந்நோயாளி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் எந்த ஒரு மாத்திரையையும் எடுத்து குணமாகாவிட்டால், அது ஆபத்தானதே.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு மேற்கூறிய அறிகுறிகள் தென்படாமல் இருக்கலாம். மாறாக மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தொடர்ந்து 5 நாட்கள் அதிகப்படியான காய்ச்சலால் அவஸ்தைப்படக்கூடும். அத்தகையவர்களும் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல் எப்படி பரவும்?

பெரும்பாலான வைரஸ் காய்ச்சல், அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும். வைரஸ் காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆரம்பத்தில் வைரஸானது இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் தடங்களில் பரவும். வித்தியாசமாக சிலருக்கு பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு அல்லது நெருங்கிய நிலையில் இருப்பதன் மூலம் பரவும் வாய்ப்புள்ளது.

வைரஸ் காய்ச்சல் வந்தால்

உடனே என்ன செய்ய வேண்டும்? வைரஸ் காய்ச்சல் வந்தால், உடல் வறட்சியடையாமல் இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், ஓய்வு நன்கு எடுக்க வேண்டும் மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை தவறாமல் உட்கொண்டு வர வேண்டும்.

வைரஸ் காய்ச்சலுக்கான வீட்டு வைத்தியம்

வைரஸ் காய்ச்சலை சரிசெய்வதற்கான வீட்டு வைத்தியம், மல்லி டீ, வைரஸை அழிக்க வெந்தய தண்ணீர் மற்றும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்த கஞ்சி குடிக்க வேண்டும்.

மற்றவருக்கு பராமல் தடுப்பது எப்படி?

வைரஸ் காய்ச்சல் மற்றவருக்கு பரவாமல் இருப்பதற்கு, கப், ஸ்பூன், உண்ணும் தட்டு போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது. மேலும் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய டிஸ்யூவை அவ்வப்போது தூங்கி எறிவதோடு, கிருமிகள் பரவாமல் இருக்க கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும்.

14 1436873524 8 fever sick

Related posts

நீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன?

nathan

தெரிஞ்சிக்கங்க…வேப்ப எண்ணெயில் இவ்வளவு பலன் இருக்கா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… ஜிம் செல்லும் முன் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!!!

nathan

100 ஹெல்த்தி ஹேபிட்ஸ்! ‘நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ !! ஹெ…

nathan

உங்கள் பாதங்களில் இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

nathan

கண்களைப் பாதிக்கும் ஒளிர்திரை!

nathan

இந்த உணவுகள் உங்கள் சிறுநீரகத்தை பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்…!

nathan

பெண்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள்

nathan

மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு

nathan