27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
fish
அசைவ வகைகள்

மீன் பிரியாணி

மீன் பிரியாணி சமைக்க எளிதானதாக இருப்பதுடன் சுவையும் அதிகமாக இருக்கும்

தேவையான பொருட்கள்
மீன் – 1/4 கிலோ

அரிசி – 2 சுண்டு

வெங்காயம் – 150 கிராம்

தக்காளி – 150 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி்

புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

தனியாத்தூள் – 1 தேக்கரண்டி

மசள்தூள் – 1/4தேக்கரண்டி

தயிர் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1/2 குழிக்கரண்டி

செய்முறை :
* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை சேர்த்து உடையாமல் வதக்கவும்.பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் "தம்" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.

* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.fish

Related posts

முட்டை பெப்பர் ஃபிரை

nathan

உங்களுக்கு தெரியுமா ஸ்பேஷல் மட்டன் கிரேவி செய்வது எப்படி????

nathan

அசத்தும் சுவையுடன் மட்டன் புலாவ்

nathan

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

nathan

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட்

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை

nathan

சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை

nathan

முட்டை புளி குழம்பு

nathan

மட்டன் கறி (Chettinad Mutton Curry)

nathan