26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
tYT1zH1
சைவம்

வரகு குடைமிளகாய் சாதம்

தேவையான பொருட்கள்:

வரகு அரிசி சாதம் – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
பச்சை நிற குடைமிளகாய் – 1
சிவப்பு நிற குடைமிளகாய் – 1
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 சிட்டிகைகள்
கொத்தமல்லி தழை – 2 தேக்கரண்டி
இந்துப்பு – சுவைக்கேற்ப

குடைமிளகாய் மசாலா பொடி தயாரிக்க:

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

• குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

• வாணலியில், ‘குடைமிளகாய் மசாலா பொடி தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக அதே வரிசையில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்.

• வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் குடைமிளகாயை சேர்த்து மூடி வைத்து வதக்கவும். தேவைப்பட்டால் இடையிடையே சிறிது நீர் தெளிக்கலாம்.

• குடைமிளகாய் முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா பொடி போட்டு, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

• பின்னர் வரகரிசி சாதத்தை போட்டு மசாலா நன்றாக கலக்கும்படி கிளறவும்.

• இறுதியில் கொத்தமல்லி தழை தூவவும்.

• சுவைக்கேற்ப இந்துப்பு சேர்க்கவும். • ஏதாவது ஒரு வகை ராய்தாவுடன் பரிமாறவும்.tYT1zH1

Related posts

பாசிப்பருப்பு வெங்காய தோசை

nathan

புளியோதரை

nathan

பேபி கார்ன் பனீர் பிரியாணி

nathan

சுவையான காலிஃப்ளவர் குருமா

nathan

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

nathan

வேர்க்கடலை புளிக்குழம்பு

nathan

ஸ்பைசியான பன்னீர் 65 செய்வது எப்படி

nathan

நார்த்தங்காய் சாதம்

nathan

சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி

nathan