24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

உதட்டு வறட்சியை போக்க வேண்டுமா?

imagesபருவக்காலம் மாறும் போது, உதடுகளில் பிரச்சனை ஆரம்பிக்கும். இத்தகைய பிரச்சனையை தடுக்க நாம் சரியாகவும், முறையாகவும் உதடுகளை பராமரித்து வர வேண்டும். மேலும் சிலர் உதடுகளுக்கு அதிகமான அளவில் லிப்ஸ்டிக்கை போடுவார்கள்.

அவ்வாறு அதிகப்படியான லிப்ஸ்டிக் உதடுகளில் இருந்தால், அதில் உள்ள கெமிக்கல் உதடுகளில் இயற்கையான மென்மைத்தன்மையை இழக்கச் செய்து, பொலிவிழக்கச் செய்யும். உதடுகள் வறட்சியடையாமல், மென்மையோடும், பொலிவோடும் காணப்படுவதற்கு, ஒருசில இயற்கை முறைகளைப் பின்பற்றி வந்தால், சரி செய்துவிடலாம்.

• உதடு வறட்சியடையும் போது உதட்டில் தேங்காய் எண்ணெயை வைத்தால், உடனே வறட்சியானது போய்விடும். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் உள்ள ஃபேட்டி ஆசிட் வறட்சியை நீக்கி, உதட்டை எண்ணெய் பசையுடன் வைக்கும்.

• தக்காளியை நறுக்கி, அதனை வறட்சியடைந்த உதட்டில் தடவினால், வறட்சி நீங்கிவிடும். வேண்டுமெனில் தக்காளியில் தேனை தடவியும் உதட்டில் மசாஜ் செய்யலாம்.

• வறட்சியான மற்றும் பொலிவிழந்த உதட்டிற்கு எலுமிச்சை சிறந்ததாக இருக்கும். ஏனெனில் பொதுவாக எலுமிச்சை இறந்த செல்களை சருமத்தில் இருந்து வெளியேற்றுவதில் சிறந்தது. எனவே இதனை உதட்டில் தடவினால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாகும். மேலும் இந்த முறையில் சிறிது தேனையும் சேர்த்து செய்து, உதடு வறட்சியடையாமல் இருக்கும்.

• உடலில் நீர் வறட்சி இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். எனவே அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இதனால் வறட்சி நீங்குவதோடு, உடலும் நன்கு பொலிவோடு இருக்கும்.

Related posts

பலரும் அறிந்திராத மிளகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உரோமத்தை நீக்கும் முறைகள்!..

sangika

முகப்பருக்கள் மறைய

nathan

பொலிவான சருமத்தை எளிதில் பெற – Ingredients for a clear skin

nathan

இயக்குநர் அட்லீ-பிரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு..

nathan

இவ்வாறான காரணங்களினால் தான் முகம் முதுமைத் தோற்றத்தை அடைகின்றது!…

nathan

ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டில் விசேஷம்! நீங்களே பாருங்க.!

nathan

ரசிகரிடம் மனம் திறந்த அனிதா! நான் வெளியேறியதற்கு இதுதான் உண்மையான காரணம்!

nathan

விஜய் வீட்டு அருகிலேயே பல கோடி ரூபாயில் வீடு வாங்கிய முன்னணி நடிகை …..!

nathan