24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
wife do not want indicate that the symptoms to husband
மருத்துவ குறிப்பு

கணவரிடம் அந்த விஷயத்தில் விருப்பமில்லை என்பதை மனைவி உணர்த்தும் அறிகுறிகள்

பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும் இல்லாமல் இரவில் மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை.

கணவரிடம் அந்த விஷயத்தில் விருப்பமில்லை என்பதை மனைவி உணர்த்தும் அறிகுறிகள்
பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும் இல்லாமல் இரவில் மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது ‘என்னவும் செய்துவிட்டு போ’ என்கிற விரக்தி மட்டுமே இருக்கும்…இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளில் கடினத்தன்மையும், வலியும் ஏற்படக் கூடும்.

பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும்…இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துகொள்ளலாம்…

* இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணிய செய்து உறவு கொள்ள சொல்வார்கள்.

* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.

* தலை வலி, வயிறு வலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள்.

* தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு…

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!

மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும் உறவுக்கு ‘ரெட் சிக்னல்’ என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள்…எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்க கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவை பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.

உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ‘ உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற’ என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.

இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாக குறைந்து போகும் என்பதை தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை.

உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிட கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?

இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துகொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது.

படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்…உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவே செய்வாள்…அப்படிபட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்று புரிந்து கொள்வது ஒரு கணவனின் கடமை…அந்த காரணத்தை அறிந்து சரி செய்து கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.wife do not want indicate that the symptoms to husband

Related posts

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எப்படி தடுக்கலாம்?

nathan

நிறங்களைக் கண்டுபிடிப்பதில் குறைபாடு

nathan

நீங்கள் குறட்டையால் சிக்கி தவிப்பவராக ?அப்ப இத படிங்க!

nathan

எப்படி ரகசிய கேமராவை தெரிந்துகொள்வது….?

nathan

எச்சரிக்கை! ஆரோக்கியம் என்று நினைத்து நீங்கள் செய்யும் தவறுகள்!

nathan

ஒருவருக்குக் கொட்டாவி வந்தால் அருகில் உள்ளவர்களுக்கும் கொட்டாவி வருவது ஏன்?..!!

nathan

சூப்பர் டிப்ஸ்! நோய்களுக்கு தீர்வு தரும் நாட்டு வைத்திய குறிப்புகள்…!

nathan

மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்!!காய்ச்சிய எண்ணெய்!

nathan

சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்பு

nathan