32.9 C
Chennai
Friday, Aug 15, 2025
MLNNTnT
சூப் வகைகள்

வாழைத்தண்டு சூப்

என்னென்ன தேவை?

நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப்,
வெங்காயம் – 1,
பிரிஞ்சி இலை – 1,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பாசிப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
நெய், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். 5 நிமிடங்கள் கழித்து, நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். குக்கரில் அத்துடன் பாசிப் பருப்பும் போட்டு, 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியதும் பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி, தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். சூடாகப் பரிமாறவும். தேவைப்பட்டால் 1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளோரை கரைத்து விட்டு கொதிக்க விடவும்.MLNNTnT

Related posts

சத்தான பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

வெங்காய சூப்-உணவு நல்லது வேண்டும்!

nathan

மணத்தக்காளி முளைகட்டிய பயறு சூப்

nathan

ஸ்பைசி சிக்கன் சூப்

nathan

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்

nathan

காளான் சூப்

nathan

சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

மருத்துவ குணம் நிறைந்த புதினா சூப்

nathan

சூப்பர் டிப்ஸ் ! வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்

nathan