29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
zUHjHRK
சூப் வகைகள்

ராஜ்மா சூப்

என்னென்ன தேவை?

ராஜ்மா – 1/4 கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
பூண்டு – 3 பல்,
பிரிஞ்சி இலை – 1,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),
உப்பு – தேவையான அளவு,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிரிஞ்சி இலை, பூண்டைப் போட்டு வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, ஊற வைத்த ராஜ்மா, 2 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் வரும் வரை வேக விடவும்.

அதை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதில் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 2 கொதி வந்ததும், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.  ஃப்ரெஷ் க்ரீமுக்கு பதிலாக
2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்தும் கொதிக்க விடலாம்.zUHjHRK

Related posts

மீனை வைத்து எளிய முறையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்க்லாம்.

nathan

வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும் பூண்டு சூப்

nathan

உடல் பலவீனமானவர்கள் வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

nathan

மணத்தக்காளி முளைகட்டிய பயறு சூப்

nathan

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

nathan

முட்டைக்கோஸ் சூப்

nathan

ஜிஞ்சர் சூப்

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரக நோயைத் தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்

nathan

பட்டாணி சூப்

nathan