2YKjO2J
சைவம்

கத்தரிக்காய் பச்சடி

என்னென்ன தேவை?

ஒரு பெரிய கத்தரிக்காய் – 250-300 கிராம்,
ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது,
பச்சைமிளகாய் – 4-6,
தக்காளி – 2,
பொடித்த இஞ்சி – சிறு துண்டு,
பொடித்த மல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
வறுத்துப் பொடித்த சீரகத்தூள் – ½ டீஸ்பூன்.
பூண்டு – 4 பற்கள்


எப்படிச் செய்வது?

ஒரு பெரிய கத்தரிக்காயை எடுத்து துடைத்து அதன் மேல் சிறிது எண்ணெயை தடவி, எல்லாப் பக்கமும் தோல் கறுக்கும்வரை அடுப்பில் வைத்துச் சுடவேண்டும். கத்தரிக்காய் சொத்தை இல்லாமல் பார்த்து செய்ய வேண்டும். பின் ஆறியதும் தோலை உரித்து விட்டு, கழுவி இரண்டாக வெட்டி சுத்தப்படுத்தி மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பாதி வெங்காயத்தை வதக்கி இத்துடன் பாதி தக்காளி, பச்சைமிளகாய், உப்பு, மசித்த கத்தரிக்காய், இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கவும்.

குறிப்பு: பரிமாறும்போது பச்சை மல்லி, தக்காளி, சீரகத்தூள், வெங்காயம் தூவி பரிமாறவும்.2YKjO2J

Related posts

சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படி

nathan

வேப்பம்பூ சாதம்

nathan

அரிசி பருப்பு சாதம்

nathan

காரசாரமான மொச்சை பொரியல் செய்வது எப்படி

nathan

தனியா பொடி சாதம்

nathan

சுவையான கடலைப்பருப்பு தேங்காய் குழம்பு

nathan

முட்டைகோஸ் – பட்டாணி சாதம்

nathan

ருசியான சாமை சாம்பார் சாதம்

nathan

சிம்பிளான தக்காளி சாதம் செய்முறை விளக்கம்

nathan