எத்தனையோ நல்ல மூலிகைகள் நம் சமையலறையிலேயே இருக்கிறது. அந்த பொருட்களைத்தான், எல்லா அழகு சாதனப் பொருட்களை தயாரிப்பவர்களும் கெமிக்கல் கலந்து, நமக்கு க்ரீம்களாக விற்கின்றனர்.
அவற்றை விளம்பரங்களில் பார்த்து, அதிக காசு கொடுத்து வாங்குகிறோம். நேரடி பயனை எளிதில் அடைவதை விடுத்து, ஏன் தலையை சுற்றி மூகை தொடவேண்டும். என்ந்தெந்த பொருட்கள் என்னென்ன பலனைத் தரும் என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நெல்லிக்காய் எண்ணெய் :
நெல்லிக்காய் எண்ணெயை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தலையில் மசாஜ் செய்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். நரை முடி மறைந்து கருமையான கூந்தல் கிடைக்கும். இதில் உள்ள விட்டமின் சி சத்து, பொடுகினை விரட்டும்.
மஞ்சள் :
இது கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.
கடலை மாவு :
கடலைமாவு முகத்தில் படியும் அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். கடலைமாவுடன் பால் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
குங்குமப்பூ:
இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. உதடுகள் சிவப்பாக, குங்குமப் பூவை பொடி செய்து நீரில் ஊறவைத்து பின் அந்த நீரில் சிறிது வெண்ணெயை குழைத்து உதடுகளில் பூசி வந்தால் சிவந்த உதடு பெறலாம். குங்குமப் பூவை பாலில் கலந்து முகத்தில் பூசி வந்தால் நல்ல சிவந்த நிறத்தை கொடுக்கும்.
ரோஸ் வாட்டர்:
ரோஸ் வாட்டர் கண்களில் ஏற்படும் கரு வளையங்களை போக்கவும், சருமத்தை மெருகேற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இது சிறந்த கிளென்ஸராகவும் உபயோகப்படுத்தலாம். அழுக்குகளை சருமத்திலிருந்து வெளியேற்றிவிடும்..
சந்தனம் :
சந்தனம் முகப்பரு, சரும அலர்ஜி, கப்புளங்கள் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தலாம். சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை அழித்துவிடும். குளிர்ச்சி தரும். சந்தனத்தை சரி செய்து கண்மையாக கண்களில் இட்டுக்கொண்டால், கண்களுக்கு குளிர்ச்சி தரும். கருவளையமும் வராது.
சீகைக்காய் :
இவை தலையில் உள்ள பொடுகை நீக்குகிறது. கூந்தலின் வேர்க்கால்களுக்கு வலுவூட்டி, முடியை அடர்த்தியாக வலரச் செய்கிறது
தயிர் :
இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் இயற்கையான பிளீச்.. முகத்திலுள்ல கருமையை அகற்றி பளிச்சிட வைக்கும்.
அடர்த்தியான தலைமுடிக்கு :
வாரம் ஒருமுறை தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி, மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து தலையை சீகைக்காய் கொண்டு அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கூந்தல் பளபளக்கும்.
முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து, தலையில் அதனை தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவினாலும் முடி உதிர்தல் குறையும். இது கண்டிஷனராக கூந்தலுக்கு பாதுகாப்பு அளிக்கிரது
பொடுகை விரட்ட வேப்பம்பூ:
காய்ந்த வேப்பம்பூவில் 50 கிராம் எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.
இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
ஆரஞ்சு :
ஆரஞ்சு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்கும். முகப்பருக்களை இருந்த இடம் தெரியாமல் போக்கிவிடும்.
ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது – 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் – 1 டீ ஸ்பூன். இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.