நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்
கர்ப்பம் அடைத்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்
பிரசவத்தின் வலியும், அதன் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களும் கருத்தரித்த நாள் முதலே தொடங்கிவிடுகிறது. முக்கியமாக மாதம் அதிகரிக்க அதிகரிக்க உடல் ரீதியாக அவர்கள் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். இம்மாற்றங்களில் மற்றவர் உன்னிப்பாக கவனிக்கும் வகையில் இருப்பது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான்.
கருத்தரித்த பெண்கள் பலருக்கே அவர்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தெரியாது. மற்றும் நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்…
நீங்கள் கருத்தரித்துவிட்டால் மாதவிடாய் ஏற்படாது. இந்த காரணத்தால் உங்கள் மார்பகங்கள் பெரியதாகின்றன. எனவே, இதை வைத்தே நீங்கள் கருவுற்று இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துவிடலாம். இவ்வாறு மார்பகங்கள் திடீரென பெரியதாவதை கண்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் எளிதாக பெண்கள் கருவுற்றுவிட்டார்கள் என்பதை அறிந்துக் கொள்வார்கள்.
மாதாமாதம் வயிறு மட்டுமின்றி, அவரவர் உடல்நிலையை பொறுத்து மார்பகங்களும் பெரியதாகும். இதனால் நீங்கள் கருவுற்றிருக்கும் நாட்களில் இரண்டு, மூன்று முறையாவது உள்ளாடைகள் அளவு மாறுவதால் புதிது வாங்க வேண்டி வரும்.
கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது மார்பகங்களில் நமைச்சல் மற்றும் கூச்சம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மார்பகங்களில் நீலநிற நரம்பிகள் தென்படும் வாய்ப்புகள் இருக்கிறது. இது சாதாரண ஒன்று தான்.
மார்பகங்கள் பெரிதானால், அதற்கேற்ற உள்ளாடை மாற்றி அணியுங்கள். இல்லையேல் மூச்சுவிட சிரமமாகவும், பால் சுரப்பதை தடுக்கும் வகையிலும் அமைந்துவிடும்.