28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
Y7vffhm
சூப் வகைகள்

முருங்கைக்காய் சூப்

என்னென்ன தேவை?

முருங்கைக்காய் – 3,
சின்ன வெங்காயம் – 7,
தக்காளி – 1,
தேங்காய்ப் பால் – 1/4 கப்,
மிளகு – 6,
பூண்டு – 2 பல்,
உப்பு – தேவையான அளவு,
பிரிஞ்சி இலை – 1,
கொத்தமல்லி இலை – சிறிது,
வெண்ணெய் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம், தக்காளி, மிளகு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.

தனியாக நறுக்கிய முருங்கைக்காய், பூண்டு, கொத்தமல்லி சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து முருங்கைக்காய் வேகும் வரை கொதிக்க விடவும். வெந்தவுடன் முருங்கைக்காயின் சதைப் பகுதியை மட்டும் எடுத்து வேக வைத்த வெங்காயம், தக்காளி கலவையுடன் பூண்டு, கொத்தமல்லி கலவையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை கடாயில் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து 2 கொதி வந்தவுடன் தேங்காய்ப் பால் சேர்த்து அடுப்பை அணைக்கவும். நன்றாகக் கிளறி, இறக்கி பரிமாறவும். Y7vffhm

Related posts

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

nathan

மிளகு ரசம்

nathan

நூடுல்ஸ் சூப்

nathan

தேங்காய் – வேர்க்கடலை சூப்

nathan

மிக்ஸட் வெஜிடபுள் சூப்

nathan

கிரீன் கார்டன் சூப்

nathan

பசலைக்கீரை சூப்

nathan

சைனீஸ் சிக்கன் சூப்

nathan

ஸ்பைசி சிக்கன் சூப்

nathan