25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
dioCW2O
சூப் வகைகள்

வொண்டர் சூப்

என்னென்ன தேவை?

பீன்ஸ் – 10,
கேரட் – 1,
முட்டைக்கோஸ் – 50 கிராம்,
பிரக்கோலி – 1 துண்டு,
காலிஃப்ளவர் – 1 துண்டு,
வேக வைத்த ஸ்வீட் கார்ன் – 1/2 கப்,
பச்சைப் பட்டாணி – 1/4 கப்,
பட்டை – 1 சிறு துண்டு,
தண்ணீர் – 1 லிட்டர்,
ஆலிவ் ஆயில், உப்பு, மிளகுத் தூள் – தேவைக்கு,
தைம், ரோஸ்மேரி, துளசி இலை (என மிக்ஸட் ஹெர்ப்ஸ்) – தலா 1 சிட்டிகை,
வேக வைத்த நூடுல்ஸ் அல்லது டோஃபு – 1/2 கப்,
எண்ணெய் – தேவைக்கு.

வதக்கி சேர்க்க…

சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் – தலா ஒரு துண்டு,
வெங்காயம் – 1.

மேல் அலங்கரிப்புக்கு…

சீவிய பாதாம், கிஸ்மிஸ், மிளகுத் தூள் – சிறிது.

எப்படிச் செய்வது?

பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், பிரக்கோலி, காலிஃப்ளவர் ஆகிய காய்களை துண்டுகளாக நறுக்கி, ஒரு குக்கரில் போடவும். அத்துடன் சிறிது உப்பு, பட்டை சேர்த்து வேக விடவும். இதில் 1 லிட்டர் தண்ணீரை சேர்க்கவும். வெந்ததும் இறக்கி, வேக வைத்த ஸ்வீட் கார்ன், பச்சைப் பட்டாணி, மிளகுத் தூள், வேக வைத்த நூடுல்ஸ் அல்லது டோஃபு சேர்க்கவும். மிக்ஸட் ஹெர்ப்ஸை நறுக்கிப் போடவும். ஒரு கடாயில் ஆலிவ் ஆயிலை விட்டு சூடானதும் சதுரமாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கி சூப்புடன் சேர்த்து இறக்கி, பாதாம், கிஸ்மிஸ், மிளகுத் தூள் தூவி சூடாகப் பரிமாறவும். கிளியர் சூப்பாக வேண்டும் என்றால் அப்படியே பரிமாறவும். சிறிது கெட்டியாக வேண்டும் என்றால் சோள மாவு கரைத்து ஊற்றி, இறக்கி சூப் கப்பில் ஊற்றிப் பரிமாறவும். dioCW2O

Related posts

ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

nathan

காலிஃபிளவர் சூப்

nathan

தீபாவளிக்கான ஒரு வித்தியாசமான வறுத்த குடைமிளகாய் சூப்

nathan

தாய்லாந்து மஷ்ரூம் சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan

பாதாம் தேங்காய்ப்பால் கிரீம் சூப்

nathan

சத்தான பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

இறால் சூப்

nathan

டோம் யும் சூப்

nathan