25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
tpIlYSF
மருத்துவ குறிப்பு

கரப்பான் என்றால் பயமா?

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்

பயந்துக்கிட்டே இருந்தா எப்படி மேடம்? கரப்பானைப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க…சுமார் 35 கோடி ஆண்டுகளாக கரப்பான் பூச்சிகள் இப்பூமியில் இருந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பரிணாம வளர்ச்சிக்கு பெப்பே காட்டி விட்டு, அன்றிலிருந்து இன்று வரை வடிவ அமைப்பு மாறாமல், அப்படியே அச்சு அசலாய் இருப்பது ஒரு இமாலய ஆச்சரியமே! விஷமற்ற இப்பூச்சிகள் மனிதனைக் கடிப்பது இல்லை, ரத்தத்தை உறிஞ்சுவதும் இல்லை.

எனினும் பெண்களுக்கு எப்போதுமே இப்பூச்சியின் மீது அலாதி பயம். பாத்ரூமிலோ அல்லது படுக்கை அறையிலோ கரப்பான் பூச்சியை யதேச்சையாய் பார்த்து விட்டால் போதும், அவர்கள் போடும் அலறல் உரத்த குரலில் உச்சபட்ச ஸ்தாயி! கரப்பான் பூச்சியின் மீதான பெண்களின் பய இன்ஸ்டிங்க்ட், உலகில் பல நாட்டுப் பெண்களிடமும் பரவலாக இருக்கிறது. மேலை நாடுகளில் மிகவும் நெரிசலான பெரு நகர வீதியில் காரோட்டிக் கொண்டிருந்த பெண்கள், டாஷ் போர்டு மற்றும் முன் கண்ணாடியில் கரப்பான் பூச்சியைப் பார்த்துக் கவனம் சிதறி பெரிய விபத்துகளை உருவாக்கிய செய்திகள் நிறைய உண்டு.

கரப்பான் பூதம்!

கரப்பான் பூச்சிகளின் ஆங்கிலப் பெயர் ஸ்பானிஷ் மொழியில் இருந்துதான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இப்பூச்சியின்

விலங்கினப் பெயரிடலுக்கு லத்தீன் மொழிதான் பயன்பட்டிருக்கிறது.இப்பூச்சிகள் பூமியில் எப்போது தோன்றின என்பது பற்றிய

தீர்க்கமான கண்டுபிடிப்புகள் இன்று வரை விலாவாரியாக இல்லைதான். ஆயினும் றெக்கை முளைத்த ஜீவராசிகளின் ஆரம்ப

காலப் பரிணாமத்தில் இந்தக் கரப்பான் பூச்சிகளும் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இவற்றின் றெக்கைகள் உடலின் நீள வாக்கில் அமைந்திருப்பது ஒரு பரிணாம விந்தை!354295 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கார்போனி ஃபெரஸ் பருவத்தில் வாழ்ந்த கரப்பான் பூச்சியின் புதை படிமங்கள் கிடைத்துள்ளன.இன்றைய நவீன கரப்பான் பூச்சிகளில் இருப்பது போல இவற்றின் இனவிருத்தி உறுப்புகள் பத்திரமாக உடலுக்குள் இல்லாமல், வெளிப்புறத்தில் இருந்திருக்கிறது. இந்த உறுப்புகளைப் பாதுகாப்பாய் உடலுக்குள் கொண்ட மிகச்சரியான தற்போதைய மாடல் கிரட்டேசியஸ் பருவத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பூச்சியின் தோற்ற காலத்தை ஊர்ஜிதப்படுத்துவதில் இப்பருவத்துப் படிமங்களுக்குத்தான்

ஏகப்பட்ட மார்க்!

நாம் வாழும் இந்த பூலோக விஸ்தீரணத்தில் கரப்பான் பூச்சிகள் எந்தப் பிரதேசத்தில் முதன்முதலில் தோன்றியிருக்கும் என்பது

பற்றிய ஆராய்ச்சிகளிலும் நல்ல முடிவுகள் எட்டப்படவில்லை.இருந்தாலும் இன்றைக்கு லோகம் எங்கிலும் உள்ள மானிடக் குடியிருப்புகளில் ஜீவிக்கும் கரப்பான் பூச்சிகளில் முதன்மையானது ஒரு ஜெர்மானிய ரகம்தான். மேலும் இவற்றைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் எல்லா நாடுகளிலும் இப்போது பயன்படுத்தப்படும் பொறிகளும், மருந்துகளும் அனேகமாக ஜெர்மானியக் கண்டுபிடிப்புகளே! எனவேதான் கரப்பான் பூச்சிகளின் ஆரம்பத் தோற்றம் ஜெர்மனியாக இருக்குமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யூகப் பூர்வீகம்!

‘டிக்டியோப்டெரா’ என்னும் பெரு வகைப்பாட்டிலும், ‘பிளாட்டோடியே’ என்னும் வகைப்பாட்டிலும் வரும் இந்தக் கரப்பான்

பூச்சிகளில் 18 குடும்பங்கள் இருக்கின்றன. இவற்றுள் ‘பிளாட்டிடே’ என்பதுதான் பிரதான குடும்பம். இந்தக் குடும்பத்தில் 3500க்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன. அவற்றில் ஜெர்மன் கரப்பான், ஓரியண்டல், ஆஸ்திரேலியன் மற்றும் அமெரிக்கன் கரப்பான் போன்றவை கொஞ்சம் பிரசித்தி பெற்றவை. இவை போக பழுப்பு வரி, ஜப்பானீஷ், மரக் கரப்பான், குதிக்கும் கரப்பான், முனகும் கரப்பான் மற்றும் மரப்பட்டைக் கரப்பான் போன்றவைகளும் ஓரளவிற்கு மிகுந்துள்ளன.

செகண்ட் ரேங்க்!

கரப்பான் பூச்சிகள் பல்வேறு மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளை எளிதில் ஏற்றுக் கொள்ளும் திறன் பெற்றுள்ளன. ஆகவே, மனிதன் வாழும் பிரதேசம் எதுவாயினும் இவை சாமர்த்தியமாய் அங்கே ஜீவிக்கப் பழகிக் கொள்கின்றன.மனிதனின் அருகாமை வாழ்க்கைதான் கரப்பான் பூச்சிகளைக் களிப்பூட்டுகின்றன. அதிலும் வீடு, ரெஸ்டாரன்ட்கள், மெஸ், ஹாஸ்டல்கள், ஹோம்கள் போன்ற இடங்களில் உள்ள கிச்சன் மற்றும் பாத்ரூம்கள்தான் இவற்றின் பிரத்யேக ஜாகை!

பொதுவாக கரப்பான் பூச்சி களை, மனிதனின் கட்டிடங்கள் வெகுவாக ஈர்ப்பது இயல்பு. இங்கே போய்ச் சேர்ந்துவிட்டால் இதமான வெப்பமும், பதமான ஈரப்பதமும் போதுமான அளவில் கிடைக்கும் என்று இப்பூச்சிகள் தெரிந்து வைத்திருக்கின்றன. அதாவது, அடுப்பு இருக்கும் பகுதி மற்றும் ஸ்டோர் ரூம் போன்ற இடங்களில் இப்பூச்சிகளுக்கு போதிய வெப்பமும் வெது வெதுப்பும் கிடைப்பதோடு, டாய்லெட், பாத்ரூம் மற்றும் பைப்லைன் உள்ள இடங்களில் போதுமான ஈரப்பதமும் இப்பூச்சிகளுக்கு வேண்டியமட்டிலும் கிடைக்கிறது. கரப்பான் பூச்சிகளுக்கு பெஸ்ட் ஹோம்!

சுமார் நான்கு மில்லியன் ஆண்டுகளாக மனிதனை இம்சித்துக் கொண்டிருக்கும் இந்தக் கரப்பான் பூச்சிகள், பொருட்கள் எதையும் சிதைப்பதில்லை. ஆனால், இவை இரவு நேரத்தில் உணவுப் பொருட்கள், பாத்திரங்கள் போன்றவற்றின் மீது நடந்து செல்வதால் அவற்றை, தம் கால்களில் உள்ள நோய்க் கிருமிகளாலும், எச்சில், மலம் மற்றும் உதிரும் தோல் திசுக்களாலும் நாசப்படுத்துகின்றன.

இவை பரப்பும் நோய்க் கிருமிகள் ஃபுட் பாய்சன், வயிற்றுப் போக்கு போன்ற சங்கடங்களைக் கொடுக்கின்றன. மனிதனுக்கு ஒவ்வாத கரப்பான் பூச்சியின் உடற்கழிவுகள் ஒருவித அலர்ஜியை உருவாக்கி, குறிப்பாக குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்துகிறது.

இருட்டு எதிரி!

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் பின்புறத்துச் சுரப்பி தான் அடிவயிற்றைக் கலக்கும் ஒருவித துர்வாடையை இப்பூச்சிக்குக் கொடுக்கிறது. இப்பூச்சி யின் அருகாமையோ அல்லது தொடலோ ஒரு அருவெறுப்பான வாசனையை நமக்குக் கொடுக்கிறது. இத்தகைய முகம் சுளிக்க வைக்கும் மோசமான வாடையே இப்பூச்சியின் மீதான வெறுப்பை மனிதர்களிடம் வளர்த்து விட்டிருக்கிறது.tpIlYSF

Related posts

கைகள் இல்லை… கால்கள் இல்லை… கவலையும் இல்லை! இயற்கை தந்த சவால்களை எதிர்கொண்டு, சாதனையாளராக உயர்ந்…

nathan

பழமா… விஷமா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! உயிரை பறிக்கும் நிமோனியா!… கண்டறிவது எப்படி?

nathan

கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்…

nathan

முருங்கைக்கீரையின் எளிய முறை மருத்துவம்

nathan

கணுக்கால் வலி வரக்காரணமும் – தீர்வும்

nathan

உங்க கருவுறாமை பிரச்சனை பற்றிய கட்டுக்கதை என்னென்ன தெரியுமா?

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிறுநீர் கோளாறுகளில் இருந்தும் விடுபட ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்து!

nathan

தினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!

nathan