28.2 C
Chennai
Monday, Dec 23, 2024
how to make vadacurry
சிற்றுண்டி வகைகள்

சுவையான வடைகறி ரெசிபி செய்வது எப்படி

மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் வடைகறி. இந்த வடைகறியை எளிமையான முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான வடைகறி ரெசிபி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – 1 கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய – 2
உப்பு – தேவையான அளவு

கிரேவி செய்ய :

வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது

தாளிக்க :

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அரைத்த மாவை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

* பிறகு அதில் வடைகளை 4 துண்டுகளாக பிய்த்து போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வடைகறி ரெடி!!!

* வடையை உதிர்த்து போட்டும் வடைகறி செய்யலாம். விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம்.how to make vadacurry

Related posts

பனீர் குடைமிளகாய் பராத்தா

nathan

சத்தான கேரட் – கேழ்வரகு ஊத்தப்பம்

nathan

முட்டை கோதுமை நூடுல்ஸ்

nathan

பார்லி பொங்கல்

nathan

சத்துக்கள் மிகுந்த காய்கறி வடை!!

nathan

சோயா வெஜ் நூடுல்ஸ் / Soya Veg Noodles

nathan

முள்ளங்கி ஸ்பெஷல் உருண்டை

nathan

ஹெல்த்தி மிக்ஸர்! ஈஸி குக்!

nathan

வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்…!

nathan