oDcbreV
கேக் செய்முறை

மைதா  ஃப்ரூட்  கேக்

என்னென்ன தேவை?

மைதா – 250 கிராம்,
உப்பு சேர்க்காத வெண்ணெய் – 250 கிராம்,
பொடித்த சர்க்கரை – 250 கிராம்,
முட்டை – 6,
ஆரஞ்சு எசென்ஸ் – 2 டீஸ்பூன்,
ஆரஞ்சு கலர் – சிறிதளவு,
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்,
ஆரஞ்சு பீல் (பெரிய கடைகளில் கிடைக்கும்) – 50 கிராம்,
துருவிய ஆரஞ்சுப் பழத்தோல் – 1 டீஸ்பூன்,
சூடான பால் – 2 கப்,
ஆரஞ்சு பழச்சாறு – 1 கப்.
எப்படிச் செய்வது?

வெண்ணெய், சர்க்கரை, எசென்ஸ், கலர் சேர்த்து நுரைக்க அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். ஆரஞ்சு பீலைத் துண்டு துண்டாக நறுக்கி, மைதாவுடன் கலக்கவும். முட்டையை நுரைக்க அடிக்கவும்.நுரைக்க அடித்த முட்டையை, சர்க்கரை, வெண்ணெய்க் கலவையுடன் சேர்த்து அடிக்கவும். ஆரஞ்சு தோலையும் சேர்த்து அடிக்கவும். இத்துடன் மைதா கலவை, ஆரஞ்சு பழச்சாறு, சூடான பால் அனைத்தையும் சேர்க்கவும். மாவைத் தளர்வாக தோசை மாவு பதத்துக்கு திரட்டி, 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யவும். oDcbreV

Related posts

ஜெல்லி கேக்

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

தேங்காய் கேக்

nathan

சாக்லெட் பிரெளனி

nathan

பனீர் கேக்

nathan

முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக் (ஜெர்மனி)

nathan

சாஃப்ட் வெனிலா கேக்

nathan

சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக்

nathan

பேரிச்சம்பழ கேக்

nathan