23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
p116a
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர நொறுவை! – பிரெட் போண்டா

என்னென்ன தேவை?

உருளைக் கிழங்கு 2

கேரட், பீன்ஸ், கோஸ் (நறுக்கியது) – கால் கப்

பச்சைப் பட்டாணி – கால் கப்

நறுக்கிய வெங்காயம் அரை கப்

தக்காளி 1

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் அரை டீஸ்பூன்

கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிதளவு

பிரட் ஒரு பாக்கெட்

பால் அரை லிட்டர் (காய்ச்சியது)

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுந்து – அரை டீஸ்பூன்

மல்லித் தழை, கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து, மசித்துக்கொள்ளுங்கள். பச்சைப் பட்டாணியை வேகவைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் கேரட், பீன்ஸ், கோஸ் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்குங்கள்.

பிறகு மிளகாய்த் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து சுருள வதக்கி இறக்கிவையுங்கள். பிரெட் துண்டின் ஓரங்களை நீக்கிய பிறகு, பாலில் ஒவ்வொன்றாக நனையுங்கள். மசாலாவை நடுவில் வைத்து உருண்டையாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.p116a

Related posts

உழுந்து வடை

nathan

சூப்பரான கேழ்வரகு வெல்லம் தோசை

nathan

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

nathan

உடலுக்கு பலம் தரும் – கம்பு தோசை

nathan

சாக்லேட் கேக் செய்வது எப்படி ?

nathan

கேழ்வரகுப் பணியாரம்! பாரம்பர்ய உணவுப் பயணம்!!

nathan

சம்பல் ரொட்டி

nathan

பில்லா குடுமுலு

nathan

கம்பு தோசை..

nathan