யோகாசனம் செய்வதற்கு காலத்தையும், இடத்தையும் தெரிவுசெய்தல் வேண்டும்.
ஒவ்வொரு ஆசனத்தையும் எத்தனை முறை செய்ய வேண்டும்
யோகாசனம் செய்வதற்கு காலத்தையும், இடத்தையும் தெரிவுசெய்தல் வேண்டும். காலை 5 1/2 மணி முதல் 7 1/2 மணி வரையிலும் (இடையில்), மதியம் 11 1/2 மணி முதல் 1 1/2 மணி வரையிலும் (இடையில்) மாலை 5 1/2 மணி முதல் 7 1/2 மணி வரை (இடையில்) யோகாசனம் செய்தல் வேண்டும். யோகாசனம் செய்யும் இடம் காற்றோட்டமான, அமைதியான இடமாக இருத்தல் அவசியம்.
யோகாசனம் செய்யும் முறைகள்….
1) வஜிராசனம் – 3 நிமிடங்கள்
2) திரிகோணாசனம் – 3 முறை
3) பிறையாசனம் – 3 முறை
4) பாதஅஸ்தமனாசனம் – 3 முறை
5) புயங்காசனம் – 3 முறை
6) சலபாசனம் – 3 முறை
7) தனுராசனம் – 3 முறை
8) பட்சிமோத்தாசனம் – 3 முறை
9) அர்த்தமத்தியேத்திராசனம் – 1 முறை
10) பத்மாசனம் – 3 நிமிடங்கள்
11) மச்சாசனம் – 5 முறை மூச்சை உள்இழுத்து வெளியேற்ற வேண்டும் 12)யோகமுத்திரா – 3 முறை
13) சவாசனம் – 2 நிமிடங்கள்
எப்பொழுதும் இறுதியாக சவாசனம் கட்டாயம் செய்தல் வேண்டும். இவ்வளவு ஆசனங்களையும் செய்ய கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எடுக்கும். காலையில் செய்வது மிகவும் நல்லது.
அனைத்து ஆசனங்களையும் செய்ய முடியாதவர்கள் சூரிய நமஸ்காரத்தை மட்டுமாவது செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.