28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
paneer kurma 03 1464957277
சைவம்

சிம்பிளான… பன்னீர் குருமா

இரவில் சப்பாத்திக்கு பன்னீர் கொண்டு ஏதாவது கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பன்னீர் குருமாவை செய்யுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ளோர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த பன்னீர் குருமாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பன்னீர் – 3/4 கப் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் பிரஷ் க்ரீம் – 1 1/2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு… எண்ணெய் – 3 டீஸ்பூன் பட்டை – 1/4 இன்ச் கிராம்பு – 2 பிரியாணி இலை – 1

அரைப்பதற்கு… துருவிய தேங்காய் – 1/2 கப் முந்திரி – 8 கசகசா – 1/2 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – 1/2 இன்ச் பூண்டு – 5

செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீரை சேர்த்து பொன்னிமாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 5-10 நிமிடம், எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு க்ரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், பன்னீர் குருமா ரெடி!!!

paneer kurma 03 1464957277

Related posts

கொண்டக்கடலை தீயல்

nathan

சப்ஜி பிரியாணி

nathan

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

nathan

உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவல்

nathan

புளியோதரை

nathan

பாகற்காய் புளிக்குழம்பு

nathan

பருப்பு சாதம்

nathan

உருளைக்கிழங்கு சாதம்

nathan

சூப்பரான பன்னீர் – பச்சைப்பட்டாணி குருமா

nathan