என்னென்ன தேவை?
முருங்கைக் கீரை – 4 கப்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பூண்டு – 5 பற்கள்,
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (துருவியது),
சின்ன வெங்காயம் – 4 (நறுக்கியது),
தக்காளி – 1 (நறுக்கியது),
தண்ணீர் – 6 கப்,
உப்பு – தேவையான அளவு,
மிளகு – தேவையான அளவு,
எண்ணெய்/நெய் – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் முருங்கைக்கீரை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் வேக வைத்து, மிளகு மற்றும் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், முருங்கைக்கீரை சூப் ரெடி!!!