25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
nt1Jfct
சைவம்

பனீர் 65

என்னென்ன தேவை?

மைதா- 2 1/2 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – 3 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய இஞ்சி- 1 1/2டீஸ்பூன்,
துருவிய பூண்டு- 1 1/2 டீஸ்பூன்,
சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்,
தனியாத் தூள்- 1 டீஸ்பூன்,
சிவப்பு ஃபுட் கலர் (தேவையானால்) – 1 துளி,
தண்ணீர் – 5 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்(பொரிப்பதற்கு) – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பனீர் துண்டுகளை 1 அங்குலத் துண்டுகளாக வெட்டவும். மைதா, கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, இஞ்சி, பூண்டு, சாட் மசாலா, கரம் மசாலா, அரை டீஸ்பூன் மிளகாய் தூள், தனியா தூள், ஃபுட் கலர், முக்கால் டீஸ்பூன் உப்பு, தனியே எடுத்து வைத்த 2 டீஸ்பூன் எண்ணெய் எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும். கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு ஓரளவு கெட்டியாகக் கலக்கவும். பனீர்
துண்டுகளை அதில் போட்டு நன்கு முங்கும்படி தோய்க்கவும். எண்ணெயைக் காய வைத்து, அதில் பனீர் துண்டுகளைப் போட்டுப் பொரிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரிக்கவும். கோல்டன் பிரவுன் நிறத்துக்கு வந்ததும் எடுத்து வைத்து அதிகப்படியான எண்ணெயை வடித்துப் பரிமாறவும்.nt1Jfct

Related posts

மஷ்ரூம் ராஜ்மா குருமா

nathan

தயிர் உருளை

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan

கேப்ஸிகம் கிரேவி செய்ய வேண்டுமா….

nathan

சுவையான கடலைப்பருப்பு தேங்காய் குழம்பு

nathan

பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்

nathan

சென்னா தேங்காய்ப்பால் குழம்பு

nathan

சுவையான முள்ளங்கி கீரை பொரியல்

nathan

ரவா பொங்கல்

nathan