30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
201606030832059792 how to make pepper kulambu SECVPF
சைவம்

கிராமத்து மிளகு குழம்பு செய்முறை விளக்கம்

கோடையில் அதிகம் வியர்ப்பதால், சிலருக்கு சளி பிடிக்கும். இதற்கு மிளகை குழம்பு செய்து மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிடுவது சிறந்த வழி.

கிராமத்து மிளகு குழம்பு செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 15
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

மல்லி (தனியா)- 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் பொன்னறிமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 20 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், மிளகு குழம்பு ரெடி!!!201606030832059792 how to make pepper kulambu SECVPF

Related posts

சத்து நிறைந்த முருங்கைப்பூ உணவு: முருங்கைப்பூ சாதம்

nathan

பச்சை சுண்டைக்காய் கார குழம்பு

nathan

தேங்காய்ப் பால் வெந்தய சோறு

nathan

வாழைக்காய் பொடி

nathan

பேச்சுலர்களுக்கான… பருப்பு கடையல்

nathan

வாழைக்காய் வெல்லக்கூட்டு

nathan

தேங்காய்ப்பால் புளியோதரை

nathan

சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்

nathan

ஓமம் குழம்பு

nathan