juice
பழரச வகைகள்

கேரட் – பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

கேரட் – 1
பப்பாளி பழம் – 1
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பால் – ஒரு கப்
தண்ணீர் – 2 கப்
தேன் – சுவைக்கு
ஐஸ் கட்டி – 5 (தேவைக்கு)

செய்முறை:

* கேரட், இஞ்சியை கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

* பப்பாளி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* பப்பாளி பழத்துண்டுகளுடன் கேரட் ஜூஸ், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

* பருகுவதற்கு முன் காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ்கட்டி கலந்து பருகவும்.

* பால், ஐஸ்கட்டி விரும்பாதவர்கள் அதை சேர்க்காமலும் பருகலாம்.

* சுவையான கேரட் – பப்பாளி ஜூஸ் தயார்.

குறிப்பு:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
கேரட்டில் வைட்டமின் ‘ஏ’ சத்தினை மலிவாகப் பெறலாம். வாழ்நாள் இறுதிவரை கண்களுக்கு கண்ணாடி அணியாமல் தவிர்க்க கேரட் நிறைய சாப்பிடவும்.juice

Related posts

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

nathan

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

nathan

சத்தான ஃப்ரூட் சாட் மசாலா

nathan

சருமப் பாதுகாப்புக்கு தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்!

nathan

இஞ்சி கற்றாழை ஜூஸ்

nathan

சுவையான கேரட் ஜூஸ்

nathan

அட்டுக்குலு பாலு

nathan

ஜில்ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி

nathan

கேரட் லஸ்ஸி

nathan